நெல்சன் வைத்த கோரிக்கை!… என்ன அல்லு அர்ஜுன் இப்படி சொல்லிட்டாரு?!.. ஷாக்கான தமிழ் ரசிகர்கள்!…

Published on: November 25, 2024
pushpa2
---Advertisement---

புஷ்பா 2 ஆடியோ லான்சில் நெல்சன் வைத்த கோரிக்கைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் பதில் அளித்து இருக்கின்றார்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் புஷ்பா. இந்தியா அளவில் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படம் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு இந்தியா அளவில் மிகவும் பிரபலமானார் அல்லு அர்ஜுன்.

இதையும் படிங்க : Biggboss Tamil 8: பெண் போட்டியாளருக்காக கலங்கிய அருண்… அர்ச்சனாவ மறந்துடாதீங்க பாஸ்!

தெலுங்கு சினிமாவில் ஒரு புதிய அடையாளமாக புஷ்பா திரைப்படம் மாறி இருந்தது. மேலும் இதில் நடித்த நடிகர்களுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற காரணத்தால் இதன் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருக்கின்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாட்னாவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்ததை பார்த்த பலரும் ஆச்சரியமானார்கள். அந்த வகையில் நேற்று சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியமில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலிலா, இயக்குனர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள் .

pushpa2
pushpa2

இதில் சிறப்பு விருந்தினராக நெல்சன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுனின் பேச்சு தமிழ் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பேசிய இயக்குனர் நெல்சனிடம் தொகுப்பாளர்கள் உங்கள் இயக்கத்தில் எப்போது அல்லு அர்ஜுன் அவர்கள் நடிப்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த நெல்சன் கூறியிருந்ததாவது ‘புஷ்பா திரைப்படத்திற்கு முன்னதாக புட்ட பொம்மா படத்தை பார்த்துவிட்டு அவரிடமே போன் செய்து கூறினேன். யாரெல்லாம் அல்லு அர்ஜுன் போல் டான்ஸ் ஆடுவது என்று போட்டி வைத்தால் அதில் அவர் மட்டும்தான் வின்னராக இருப்பார். அவர் நடனம் ஆடுவதை திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். அந்த ஸ்வாக், ஸ்டைல் என அனைத்துமே மாசாக இருக்கும்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் தான் பதில் கூற வேண்டும்’ என்று நெல்சன் பேசியிருந்தார். இந்த கேள்விக்கு அல்லு அர்ஜுன் ஓகே கூறிவிட்டார். பின்னர் நெல்சன் ஒரு சின்ன விஷயம் உங்களிடம் கூற வேண்டும். நான் முதன்முறையாக அல்லு அர்ஜுன் அவர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்று கதை சொல்ல போன போது எனக்கு தெலுங்கு தெரியாது. எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க: பணத்தை கொடுத்து சீன் போட்ட விஜயா… இனியாவுக்காக இறங்கி வந்த கோபி… உடைந்த தங்கமயிலின் ரகசியம்!..

ஆனால் அவர் என்னிடம் மிக அழகாக தமிழ் பேசினார். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது. அல்லு அர்ஜுன் அவர்கள் நேரடியாகவே ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும். பாட்னாவுக்கு வந்த கூட்டத்தை பார்த்தேன். நீங்கள் அனைத்து மொழிகளிலும் நேரடியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்பது எனது விருப்பம் என்று நெல்சன் கூறினார். உடனே அல்லு அர்ஜுனும் தலையாட்டி ஓகே என்று பதில் அளித்தார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.