Connect with us

அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

latest news

அடடடடா! அப்பப்பா.. நயன் நடிச்ச படத்தை பார்த்து மகன்கள் இருவரும் கொடுத்த ரியாக்‌ஷன்

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மூலம் தன்னுடைய முதல் பாலிவுட் அறிமுகத்தை பதிவுசெய்தார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் கிளாமராக நடித்து வந்தார். அஜித், விஜய் , சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது கூட ராக்காயி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஒரு ஆக்‌ஷன் படமாக அது உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட சாணிக்காயிதம் படத்தை நியாபகப் படுத்துகிறது.

இதையும் படிங்க: ஒரு 20 தடவ கேட்டுருப்பேன்!.. இத நீங்க தான் எழுதுனீங்களா?.. செல்வராகவனை பிரமிக்க வைத்த இயக்குனர்!..

இந்த நிலையில் நயன்தாராவின் இரு மகன்களின் வீடியோ ஒன்று இன்று வெளியாகியிருக்கின்றது. தன்னுடைய இரு மகன்களை கவனிக்க நயன் கூடவே இரு பணியாட்களை வைத்திருக்கிறார். நயன் விக்கி குழந்தைகளுடன் எங்கு போனாலும் அந்த பணியாட்களையும் உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் பாடலை அவர் இரு மகன்களும் பார்க்கும் மாதிரியான வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் பாடலை பார்த்த நயனின் இரு மகன்களும் அடடடடடா.. அப்பப்பபா என்று சந்தோஷத்தில் கத்துகிறார்கள். அதை பார்க்கும் போது மிகவும் க்யூட்டாக இருக்கிறது.

mayanthara1

mayanthara1

இதையும் படிங்க: சோபிதா கிட்ட இருக்கிற ஸ்பெஷலே இதுதான்!.. வருங்கால மனைவி குறித்து மனம் திறந்த நாகசைதன்யா!…

அந்த வீடியோவில் நயன் இரு மகன்களை சுற்றி பெட் ரூமில் அந்த இரு பணியாட்களும் அருகில் உட்கார்ந்து அவர்கள் ரசிப்பதை பார்த்து சிரித்து மகிழ்கின்றனர். உயிர், உலக் என்ற பெயர் கொண்ட நயனின் இரு மகன்களும்தான் இப்போது நயனுக்கு இருக்கும் பெரிய சொத்து.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DCybZGWx0ty/?igsh=NDZmY2VnYnRyajN5

To Top