Cinema News
பிரதீப் ரங்கநாதனுக்கு அடித்த லக்!.. அஜித் தயாரிப்பாளரை வளைத்து போட்ட சூப்பர் சம்பவம்..!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மைத்ரி மூவிஸ் மேக்கஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் கோமாளி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் திரைப்படத்திலேயே ஜெயம் ரவி அவர்களை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். இந்த திரைப்படம் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் பலரையும் கவர்ந்தது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…
படம் முழுவதும் ஜெயம் ரவியின் அப்பாவித்தனமான கேள்விகளும் யோகி பாபுவின் நையாண்டியும் படத்திற்கு மிகச் சிறப்பாக கை கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கிய அப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
சாதாரணமான கதை என்ற போதிலும் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் படம் அமைந்திருந்த காரணத்தால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படி படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கப் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த திரைப்படத்தை சுதா கொங்குராவின் உதவிய இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க இருப்பதாகவும், இப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி ஓகே வாங்கியதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது எல்ஐசி திரைப்படத்தில் நடித்து வரும் பிரதீப் அதனை தொடர்ந்து டிராகன் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இதையும் படிங்க: கார்த்திக்கு ஒர்க்அவுட் ஆவது சூர்யாவுக்கு பேக் ஃபயர் ஆகுதே?!… இதை யாராச்சும் நோட் பண்ணிங்களா?…
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு மைத்திரி மூவிஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க உள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் ஏற்கனவே அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. தமிழில் இவர்கள் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். லவ் டுடே என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக தனது திறமையை நிரூபித்த பிரதீப் ரங்கநாதனுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.