Cinema News
குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…
Good bad ugly: அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முக்கிய பிரச்சினையாக மாறி இருப்பது இசையமைப்பாளர் மாற்றம். தற்போது இப்படத்தில் இணைய இருக்கிறார் கோலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் என தகவல் வெளியாகியிருக்கிறது.
விடாமுயற்சி பிரச்சினை ஒரு பக்கம் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களை கடந்தும் இன்னும் அத்திரைப்படம் ரிலீஸ் இருக்கு தயாராகவில்லை. இதனால் அஜித் உடனடியாக தொடங்கிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி.
இதையும் படிங்க: Tamil Biggboss: மீண்டும் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்க வாய்ப்பு.. இவர் சொன்ன பிறகு நம்பலனா எப்படி?
இப்படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. வித்தியாசமான வேடத்தில் அஜித் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
இன்னும் சில தினங்களில் படத்தின் மொத்த சூட்டிங் முடிந்துவிடும் எனக் கூறப்பட்டது. இதனால் எப்படியும் முதல் சிங்கிள் விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி 10ஆம் தேதி திரைப்படத்தின் ரிலீஸ் செய்யும் வைத்திருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் எப்போதும் போல அஜித் ரசிகர்களுக்கு தற்போது ஒரு ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து விலகி இருக்கிறார். இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகுமா என ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் டோலிவுட்டின் டான்சிங் குயின்?!.. அதுவும் இந்த நடிகருக்கு ஜோடியாவா?..
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகரும், பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் இணைய இருக்கிறார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஜிவி பிரகாஷின் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் ஹிட் அடித்து இருக்கிறது.
அதுபோல சமீபத்தில் அமரன் திரைப்படம் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களுக்குமே ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். இதனால் தற்போது ஜீவி உள்ளே நுழைவதால் குட் பேட் அக்லி டீமுக்கு இது பாசிட்டிவ் வரவேற்பாக தான் அமையும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.