Cinema News
சோபிதா கிட்ட இருக்கிற ஸ்பெஷலே இதுதான்!.. வருங்கால மனைவி குறித்து மனம் திறந்த நாகசைதன்யா!…
தனது வருங்கால மனைவி சோபிதா குறித்தும் தனது திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கின்றார் நடிகர் நாகசைதன்யா.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் நாகசைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மூத்த மகன் ஆவார். தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுக்கு அடித்த லக்!.. அஜித் தயாரிப்பாளரை வளைத்து போட்ட சூப்பர் சம்பவம்..!
இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டும் தான் நீடித்தது. பின்னர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். நாகசைதன்யா விவாகரத்திற்கு பிறகு நடிகை சோபிதா உடன் காதலில் இருந்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுதப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு தரப்பிலிருந்தும் இது குறித்து மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தார்கள்.
மேலும் இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகசைதன்யாவுக்கும், நடிகை துலிபாலாவுக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. சடங்குகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தனது இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் பேசியிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘சோபிதா உடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க இருக்கின்றேன். அவர் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார். என்னுள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புகின்றார். நிச்சயம் இந்த ஒரு பயணம் அற்புத பயணமாக இருக்கப் போகிறது, மேலும் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் எங்களது திருமணம் நடக்க இருக்கின்றது.
அந்த இடத்திற்கும் எனக்கும் ஒரு ஸ்பெஷல் சென்டிமென்ட் உள்ளது. அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருக்கும் எனது தாத்தாவின் சிலைக்கு முன்பு திருமணம் நடக்க வேண்டும் என்று என் குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் தாத்தாவின் ஆசியுடன் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்’ என்று பேசி இருக்கின்றார். இந்த திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்துவதற்கு நாகசைதன்யா குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கார்த்திக்கு ஒர்க்அவுட் ஆவது சூர்யாவுக்கு பேக் ஃபயர் ஆகுதே?!… இதை யாராச்சும் நோட் பண்ணிங்களா?…
சமீபத்தில் சோபிதா துலிபாலா வீட்டில் திருமண சடங்குகள் துவங்கி இருக்கின்றது. மஞ்சள் இடிக்கும் சடங்கின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் தனது திருமணத்திற்கு டிசைனர் சேலை இல்லாமல் உள்ளூரில் நெசவு செய்யப்பட்ட செயலையை அணிய போகின்றாராம் சோபிதா .
திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் இரண்டாவது திருமணம் கடைசி வரை நீடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பலரின் பிரார்த்தனையாக இருக்கின்றது.