ஒரு 20 தடவ கேட்டுருப்பேன்!.. இத நீங்கதான் எழுதுனீங்களா?.. செல்வராகவனை பிரமிக்க வைத்த இயக்குனர்!..

Published on: November 25, 2024
selvaraghavan
---Advertisement---

சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து மிகவும் பெருமையாக பேசி இருக்கின்றார் இயக்குனர் செல்வராகவன்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் கதை களத்தில் வித்தியாசத்தை காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இயக்கத்தின் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகின்றது.

தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தொடர்ந்து சினிமாவில் மற்ற இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் கடைசியாக தனது தம்பி தனுஷ் இயக்கத்தில் ராயன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: முதல் படமாக ஓடிடியில் எண்ட்ரியாகும் லக்கி பாஸ்கர்.. தேதி இதுதானுங்கோ!

இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கின்றார். மேலும் இப்படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்திருக்க கிறிஸ்டோ சேவியர் இசையமைத்து இருக்கின்றார். இப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் மத்திய சிறையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார் சித்தார்த்.

வரும் 29ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி மக்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் சொர்க்கவாசல் படம் குறித்து பேசி இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

selva
selva

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இப்படத்தில் நான் கமிட்டான உடனே முழு ஸ்கிரிப்டையும் எனக்கு கொடுத்து விட்டார்கள். நான் படித்துப் பார்த்துவிட்டு ஒரு 15 முதல் 20 தடவை அந்த இயக்குனரிடம் போய் கேட்டிருப்பேன். இதனை நீங்கள் தான் எழுதினீர்களா என்று? இது போன்ற ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவது மிகவும் கஷ்டம். அது மட்டும் இல்லாமல் எனக்கு ரொம்பவும் பொறாமையாக இருந்தது.

இப்படி ஒரு படத்தை நாம் எடுக்க முடியவில்லை என்று.. ஜெயிலில் நடக்கின்ற கதை என்றாலும் ஏகப்பட்ட திரைப்படங்கள் இதுபோல வந்திருக்கின்றது. ஆனால் இது எனக்கு மிக பிரம்மிப்பாக இருந்தது. ஒரு நல்ல திரைக்கதை, நல்ல படம், கடைசி வரைக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க: சோபிதா கிட்ட இருக்கிற ஸ்பெஷலே இதுதான்!.. வருங்கால மனைவி குறித்து மனம் திறந்த நாகசைதன்யா!…

உங்களுக்கு அந்த அனுபவம் படம் பார்க்கும்போது புரியும். நான் தற்போது வரை அந்த பிரமிப்பிலிருந்து வெளியில் வரவில்லை. எப்படி இப்படி ஒரு கதையை அவர் எழுதினார் என்று.. மேலும் இந்த படத்தை உண்மையாகவே ஜெயிலில் எடுத்தார்கள். காலையில் சென்ற உடனே ஜெயிலின் கதவை மூடி விடுவார்கள். பகல் முழுவதும் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கும்’ என்று
அந்த பேட்டியில் செல்வராகவன் சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து பெருமையாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.