ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்கும் இந்த உறவுதான்… கொந்தளித்த மோகினி டே…

Published on: November 26, 2024
AR Rahman
---Advertisement---

AR Rahman: பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து அறிவித்த நொடியிலிருந்து அவர் குறித்து நிறைய தகவல்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது அவர் மீதான மற்றொரு வதந்திதான்.

ஏ ஆர்  ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை பிரிய இருப்பதாக இருவரும் முறையாக இணையதளங்கள் மூலம் அறிவித்தனர். இதில் முதலில் சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலம் இந்த விஷயத்தை வெளியில் அறிவிக்க தொடங்கினார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஒரே பாடல் இதுதான்..! அப்புறம் என்னாச்சு?

இவர்கள் விவாகரத்து நடந்த அதே நாளில் ரஹ்மான் இசைக்குழுவில் இருந்த மோஹினி டே என்பவரும் தன்னுடைய கணவரை பிரிவதாக எக்ஸ் வலைதளம் மூலம் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஹ்மான் இதற்காகத்தான் விவாகரத்து செய்கிறாரா என கேள்விகள் எழுந்தது.

தொடர்ந்து பலரும் முகம் சுளிக்கும்படி ரஹ்மான் குறித்து பேசி தொடங்கினர். ஆனால் மற்ற பிரபலங்கள் போல அமைதியாக இருக்காமல் தன்னைக் குறித்து அவதூறாக பேசினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ரஹ்மான் தரப்பு நோட்டீஸ் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்த விஷயம் அமைதியாக இருக்கிறது.

விவாகரத்து அறிவித்த மனைவி சாய்ரா தன்னுடைய கணவர் என்னுடைய உடல்நிலை காரணமாக அவருடைய வேலையை விட்டு என்னுடன் இருக்க வேண்டிய நிலை உருவாகிறது. அவர் ரொம்பவே நல்லவர். அவரைக் குறித்து யாரும் அவதூறாக பேச வேண்டாம். எனக்காக தான் நான் விவாகரத்து செய்கிறேன் எனவும் பேசி இருப்பார்.

இதையும் படிங்க: சூர்யா படங்களின் தொடர்தோல்விக்கு என்ன காரணம்..? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

பிறருடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் என பேசி இருப்பது ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. மிகப்பெரிய இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் மீது திடீர் குற்றச்சாட்டுகள் பரவிய நிலையில் தற்போது அதை அடக்கும் விதமாக மோகினி பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.