நயன்தாராலாம் சும்மா!. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்புக்கு எவ்வளவு கோடி தெரியுமா?!…

Published on: November 26, 2024
naga chaitanya
---Advertisement---

Naga chaitanya wedding: பிரபலங்கள் தங்களின் திருமண நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்வது இப்போது அதிகரித்துவிட்டது. அனேகமாக இதை துவங்கி வைத்தவர் நயன்தாரா என்றே சொல்ல வேண்டும். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் 2022ம் வருடம் ஜூன் மாதம் நடைபெற்றது.

திருமண நிகழ்வுகளை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் பதிவு செய்தார்கள். திருமணத்திற்கு முன் நடந்த சடங்குகள், விக்னேஷ் சிவனை பற்றி நயன் பேசுவது, நயன் பற்றி விக்னேஷ் சிவன் பேசுவது, அவர்கள் இருவருக்கும் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் பேசி வாழ்த்து சொல்வது என பல காட்சிகள் அந்த வீடியோவில் சேர்க்கப்பட்டது. நெட்பிளிக்ஸில் 27 கோடி விலை பேசினார் நயன்தாரா.

nayan wedding
#image_title

ஆனால், எடுக்கப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்ததால் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை சேர்க்க ஆசைப்பட்டார் நயன்தாரா. ஆனால், தயாரிப்பாளர் என்கிற முறையில் தனுஷ் அதை அனுமதிக்கவில்லை. இது தொடர்பான என்.ஓ.சி-யை அவர் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும், அந்த காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருந்தது. எனவே, 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை திட்டி அறிக்கை வெளியிட்டார். ஆனால், தனுஷ் தரப்பில் எந்த விளக்குமும் கொடுக்கப்படவில்லை. இதை அவர் சட்டரீதியாகவே சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

nagachitanya
nagachitanya

அப்படி வெளியான நயன்தாராவின் திருமண வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்தான், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணமும் நெட்பிளிக்ஸில் வீடியோவாக வரவிருக்கிறது. வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள அந்த திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 50 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது நயன் திருமண வீடியோவுக்கு கொடுத்ததை விட 2 மடங்காகும். நாக சைத்தன்யா நடிகை சமந்தாவை சில வருடங்களுக்கு பின் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில்தான், நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்யவிருக்கிறார்.

இதையும் படிங்க: நா செகண்ட் ஹேண்ட்டா?!.. டைவர்ஸ் ரொம்பவே வலிச்சது!.. திடீரென வைரலாகும் சமந்தா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.