ஹாலிவுட் படத்தில் நடிக்கும் யோகிபாபு… அதுக்கெல்லாம் மச்சம் இருக்கணும்யா…!

Published on: November 26, 2024
yogi babu
---Advertisement---

நடிகர் யோகிபாபு காமெடியனாக திரையுலகில் களம் இறங்கி ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் நடிப்பு மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக அவரது தோற்றமே அவருக்கு பிளஸ் பாயிண்டானது.

சொல்லப்போனால் இந்த மூஞ்சிக்கெல்லாம் சினிமாவான்னு சொல்வாங்க. சுருளான பெரிய தலைமுடி, அகலமான முகம், பெரிய வாய் கொண்டவர். அதிலும் நிறமும் கருப்பு தான். ஆனால் அந்த நெகடிவ் ஷேடையே தனது பிளஸ் ஆக்கிக் கொண்டு தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து தமிழ்த்திரை உலகில் முன்னேறி வருபவர் தான் யோகிபாபு.

Also read: கயல் முதல் மருமகள் வரை… சன் டிவி டாப்5 சீரியலின் இன்றைய புரோமோ!…

2009ல் யோகி என்ற படத்தில் அறிமுகமானார். அன்று முதல் யோகி பாபுவானார். தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், அட்டகத்தி, மான்கராத்தே, அரண்மனை, தர்பார், அசுரகுருரு உள்பட பல படங்களில் நடித்து அசத்தினார். மண்டேலா படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

பெயருக்கு ஏற்ப அவருக்கு நல்ல யோகம் தான். படிப்படியாக வந்தாலும் வேகமாக முன்னேறி இன்று ஹாலிவுட் வரை போய்விட்டார். அது அவருக்கு பெரிய யோகம் தான்.

அதென்ன ஹாலிவுட் படம் என்கிறீர்களா? இதுதான் அந்த சேதி. திருச்சியை சேர்ந்த டெல் கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ராப் சிட்டி என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் யோகிபாபு. நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ், பிராண்டன் டி.ஜாக்சன், ஜே.ஜீஸி ஜென்கின்ஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

trap city
trap city

இந்தப் படத்தில் என்ன கதை தெரியுமா? இசைத்துறையில் இது சவாலான துறை. அங்கு ஒரு இளம் இசைக்கலைஞனின் போராட்டம் தான் கதை.

ஏற்கனவே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டெல் கணேசன் நெப்போலியனை ஹாலிவுட்டில் டான் ஆஃப் தி நைன் ரூஜ் மற்றும் டெவில்ஸ் நைட் ஆகிய படங்களின் மூலமாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 12 வருஷம் ஆச்சி.. மீண்டும் உங்களுடன்!.. விஜயோடு ஒரு மீட்டிங் போட்ட அமரன் பட இயக்குனர்…

ஜி.வி.பிரகாஷூம் இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் களம் இறங்குகிறார். படம் வரும் டிசம்பர் 13ல் வெளியாகிறது. டிரைலர் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.