தனுஷ்-நயன் பிரச்சனை!.. யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான பதிலை கொடுத்த பார்த்திபன்?!..

Published on: November 26, 2024
parthipan
---Advertisement---

தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருந்தது நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை தான். நடிகை நயன்தாரா 3 பக்க அளவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து வெறும் 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கின்றார் எனக் கூறி அவரைக் குறித்து தாறுமாறாக பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு தேதி குறித்த முருகதாஸ்!.. எஸ்.கே.23 பரபர அப்டேட்!…

இது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியது. அதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எந்த பக்கம் திரும்பினாலும் நயன்தாரா தனுஷ் பற்றிய பேச்சு தான். சமூக வலைதள பக்கங்களில் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், சிலர் தனுசுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார்கள். இதில் யார் மேல் தவறு என்று youtube நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர்கள் பேசி வந்தார்கள்.

இது ஒரு புறம் இருக்க நயன்தாரா அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்தில் பல நடிகைகள் அவரின் அறிக்கைக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். அதிலும் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த நடிகைகளே அந்த அறிக்கைக்கு ஆதரவு கொடுத்து இருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஒரு சம்பவமும் அரங்கேறியது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் நயன்தாராவும் தனுஷும் கலந்து கொண்டார்கள். இருவரும் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் நடிகை நயன்தாரா நீலாம்பரி ரேஞ்சுக்கு நடிகர் தனுஷை கண்டு கொள்ளாமல் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருந்தது சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகி வந்தது.

nayan dhanush
nayan dhanush

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சினிமா விமர்சனங்கள் மட்டுமே ஆளுக்கு ஆள் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் இதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் நழுவி சென்று இருந்தார்கள். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் நயன்தாரா மற்றும் தனுஷ் சர்ச்சை குறித்து பேசி இருந்தார்.

செய்தியாளர் ஒருவர் தனுஷ் நயன்தாரா பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ‘ரெண்டுமே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. படம் பார்க்கும்போது எப்படி இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறதோ? அதே அளவுக்கு இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்கின்றது என்றால் இந்தியா எடுத்தவுடனே அடித்துக் கொண்டே இருக்கின்றது.

அதில் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்காது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கடுமையான போட்டி வந்து கடைசியில் ஒரு பால் ஒரு ரன் என்கின்ற நிலை வரும்போது ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும். அதுதான் மேட்ச் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அதே போல் தான் இந்த விஷயமும்.. சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட நயன்தாராவும் தனுஷும் ஒவ்வொரு திசையில் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ரிலீஸில் ஏற்பட்ட குழப்பம்!.. நீங்க வரலன்னா என்ன நாங்க வரோம்?!.. ரெடியா இருக்காங்களே!..

தனுஷ் ஒரு பக்கமும் நடிகை நயன்தாரா கால் மேல் கால் போட்டு கெத்தாக ஒரு பக்கமும் திரும்பி அமர்ந்திருப்பதை பார்ப்பதற்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. நாம் வெறும் பார்வையாளர்கள். தான் அங்கு என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் ஒரு படமே நமக்கு கிடைக்காது. இதில் செய்தியாளரான உங்களுக்கு தான் பயங்கர சந்தோஷம். ஒருவேளை நயன்தாரா அப்படி ஒரு லெட்டர் அனுப்பவே இல்லை. ஆனால் தனுஷ் அதற்கு ரியாக்ட் பண்ணி விட்டார் என்றால் பத்திரிகை வேலை குறைந்துவிடும்’ என்று கூறியிருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.