கங்குவா படத்த செஞ்சாச்சு.. இந்தியன் 2 வையும் ஒழிச்சாச்சு.. இனி அந்தப் படம்தான்? வேதனையில் தனஞ்செயன்

Published on: November 27, 2024
kanguva 2
---Advertisement---

கங்குவா படத்தின் சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் யாரும் எதிர்பாராத ஒரு விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. அதற்கு காரணம் ரிவியூவ்ஸர்கள் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார். அதனால் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தே படத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை தயாரிப்பாளர்கள் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதை பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ரிவியூவ்ஸ் என்கிற பெயரில் நிறைய விஷயங்கள் நடப்பதாக தனஞ்செயன் கூறினார். ஒரு காலத்தில் இந்த ரிவியூவ்ஸ்தான் சினிமாவிற்கு சப்போர்ட்டாக இருந்தது. ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்களோ அதுதான் அந்தப் படத்தை ஓடவைத்தது. ஆனால் சமீபகாலமாக நிறைய யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன.

அந்த சேனல்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களை நிற்க வைத்து இதை பற்றி சொல்லுங்க.. அது எப்படி இருந்தது என நிறைய கேட்கின்றனர். சொல்லப்போனால் இந்த யூடியூப் சேனலிலிருந்து பேட்டி எடுப்பவர்கள் படத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். வெறும் டிரெய்லரை வைத்து அவர்களாகவே இமேஜின் செய்து படத்தை பற்றி கேட்கின்றனர். இதனால் என்ன ஆகுதுனா? நமக்கு பப்ளிசிட்டி கிடைக்கிறது என்பதற்காக ஒரு சில பேர் படத்தை பற்றி தேவையில்லாததை பேசுகின்றனர். இது இப்போது சினிமாவிற்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஹாலிவுட் படத்தில் நடிக்கும் யோகிபாபு… அதுக்கெல்லாம் மச்சம் இருக்கணும்யா…!

அதனால்தான் மொத்த சினிமா துறையும் இதை எப்படியாவது தடை செய்யவேண்டும் என யோசித்து இந்த மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்ததற்கு யூடியூப் மாதிரியான சில சேனல்கள்தான் காரணம். ஒரு தியேட்டரில் இருந்து வெளியே வருகிறார்கள் என்றால் ஒரு சேனல் நிற்கலாம் அல்லது இரண்டு சேனல்கள் நிற்கலாம். அதெப்படி பத்து சேனல்களுக்கு மேலாக சூழ்ந்து கொண்டு ஒருவரை மட்டும் பேட்டி எடுக்க முடியும்?

indian 2
indian 2

அப்போ அது ஒரு பக்கா ப்ளான் பண்ணித்தான் படத்தை டேமேஜ் பண்ணவேண்டும் என்ற நோக்கில் நடக்கிறது. அதிலும் படத்தை பற்றி மட்டும் பேசாமல் தனிமனித தாக்குதலும் நடக்கிறது. அவன அடிப்பேன், இவன அடிப்பேன், அவன உதைப்பேன் என தனிமனித தாக்குதல் நடக்கிறது. இப்படி பேச அவங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இப்படி தனி மனித தாக்குதல் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் பல விதிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு தேதி குறித்த முருகதாஸ்!.. எஸ்.கே.23 பரபர அப்டேட்!…

மேலும் நேற்று ஒருவர் வீடியோவில் பேசும் போது சொல்கிறார்.. கங்குவாவை செஞ்சோம்ல.. இந்தியன் 2 வையும் வச்சு செஞ்சோம்ல..அடுத்து அந்த படத்துக்கு இருக்கு.. அதற்கு காரணம் அவர் அந்த கருத்த சொன்னதால்தான் என ஒரு குறிப்பிட்ட படத்தை பற்றி பேசியிருக்கிறார். அவர் யார் என சொல்லமாட்டேன். ஆனால் இது சினிமாவுக்கு நல்லது இல்லை என தனஞ்செயன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.