டபுள் ட்ரீட்!.. அண்ணனுக்கு கல்யாணம்!.. தம்பிக்கு நிச்சயதார்த்தம்!.. களைகட்டும் நாகார்ஜுனா வீடு!..

Published on: November 26, 2024
akhil
---Advertisement---

நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு இன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் 1984 ஆம் ஆண்டு லக்‌ஷ்மி டகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகன்தான் நாகசைதன்யா. அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து நாகார்ஜுனா லக்‌ஷ்மி டகுபதியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு தேதி குறித்த முருகதாஸ்!.. எஸ்.கே.23 பரபர அப்டேட்!…

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு அகில் அக்கினேனி என்கின்ற மகன் பிறந்தார். நாக சைதன்யாவும், அகில் அக்கினேனி இருவரும் தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2014 ஆம் ஆண்டு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது.

அதன் பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார்.

akhil akkineni
akhil akkineni

சமீபத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடந்து முடிந்தது. அப்பாவை போலவே நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற இருக்கின்றது.

அண்ணனுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும் சமயத்தில் தம்பி அகில் அக்கினேனி நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார். இன்று நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்று முடிந்தது. இதனை நாகார்ஜுனா சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியுடன் தெரிவித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ரிலீஸில் ஏற்பட்ட குழப்பம்!.. நீங்க வரலன்னா என்ன நாங்க வரோம்?!.. ரெடியா இருக்காங்களே!..

நடிகர் அகில் அக்கினேனி கடந்த சில வருடங்களாக ஜைனப் ராவ்த்ஜி என்பவரை காதலித்து வந்தார். அவரை தான் இன்று நிச்சயதார்த்தம் செய்திருக்கின்றார். அண்ணனின் இரண்டாவது திருமணம் முடிந்த கையோடு தம்பியின் திருமணமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் நாகார்ஜுனா வீட்டில் தற்போது கல்யாண கொண்டாட்டம் களைக்கட்டி இருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.