நானும் விஜய் ரசிகன்தான்!… அந்தர் பல்டி அடித்த போஸ் வெங்கட்?!.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!…

Published on: November 26, 2024
tvk vijay
---Advertisement---

நானும் விஜய் ரசிகன்தான். ஆனால் நடிப்பு வேறு, அரசியல் வேறு என்று கூறியிருக்கின்றார் நடிகர் போஸ் வெங்கட்.

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஒரு திரைப்படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியினை தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வீழ்வேன் என்று நினைத்தாயோ! எத்தனை விமர்சனம் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சூர்யா.. வைரலாகும் வீடியோ

அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் தனது கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜயின் முதல் மாநாட்டிற்கு முன்பு வரை ஆதரவு தெரிவித்து வந்த பலரும் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சிற்கு பிறகு பல கட்சியினர் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அரசியல் கட்சியினர் தவிர சினிமாவில் சில நடிகர்களும் நடிகர் விஜயின் அரசியல் வருகையை தாக்கி பேசியிருந்தார்கள். அந்த வகையில் கங்குவா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக விஜயை தாக்கி பேசினார். ஒரு தலைவன் என்பவன் தன்னை நம்பி இருக்கும் நபர்கள் அனைவருக்கும் அனைத்தையும் முதலில் கொடுக்க வேண்டும்.

bose venkat
bose venkat

குறிப்பாக படிப்பை கொடுக்க வேண்டும். ஒரு தலைவன் தனது தொண்டனை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது. அந்த வகையில் சூர்யா அரசியல் களத்திற்கு வருவதற்கு தகுதியான நபர் என்று பேசி இருந்தார். இந்த செய்தி சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. விஜய் ரசிகர்கள் பலரும் போஸ் வெங்கட்டை சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போஸ் வெங்கட் கூறி இருந்ததாவது ‘நான் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு இளைஞன் என்னை பார்த்து முறைத்தான். நிச்சயம் அவன் விஜய் ரசிகனாக தான் இருப்பான். உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வெகு நேரமாக ஒரு இளைஞன் என்னை முறைத்துக் கொண்டே இருந்தான். அருகில் சென்று அவனிடம் நீ விஜய் ரசிகனா? என்று கேட்க அவன் உடனே சிரித்து விட்டான்.

நான் மற்றவர்களை விட மிகப்பெரிய விஜய் ரசிகன். அவருடைய படத்தை எப்போதுமே பார்க்க தவறியதே கிடையாது. ஆனால் அரசியல் களம்வேறு, 70 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை செய்து கொடுத்து வந்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதனை விமர்சிப்பது மிகவும் தவறானது. ஒரு தனி நபரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.

இதையும் படிங்க: வீழ்வேன் என்று நினைத்தாயோ! எத்தனை விமர்சனம் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சூர்யா.. வைரலாகும் வீடியோ

ஆனால் ஒரு மிகப்பெரிய ஆற்றலை குறை சொல்வது தவறு. எனக்கும் விஜய்க்கும் அரசியல் ரீதியான கருத்து வேறு. ஆனால் எப்போதுமே அவரை ஒரு நடிகராக நான் ரசித்து கொண்டுதான் இருப்பேன். நான் மிகப்பெரிய விஜய் ரசிகன்’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவ்வளவு பேச்சு பேசி விட்டு இப்ப என்ன அந்தர்பல்டி அடிக்கிறீங்க என்று கேட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.