ரேஸிங்கிற்கு ரெடியான தல… மனுஷன் என்ன ஸ்மார்ட்டா இருக்காருப்பா…! வைரலாகும் வீடியோ…

Published on: November 27, 2024
ajithkumar
---Advertisement---

Ajithkumar: நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரேஸிங் காரை அறிமுகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரேசிங் அதிக ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்புக்கு பின்னரும் கூட பைக்கில் உலக சுற்றுலா சென்று திரும்பினார்.

இதையும் படிங்க: Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே

தொடர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் பைக் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்திருக்கார். தற்போது அஜித் தனியாக ரேஸிங் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது அவர் விடாமுயற்சி திரைப்படத்தை முடித்துக் கொண்டு குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜனவரி முதல் வாரத்தில் திரைப்படம் வெளியாகும் என்பதால் படக்குழு விறுவிறுப்பாக படத்தை எடுத்து வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் இயக்குனர் பலரிடம் கதை கேட்டாலும் இன்னும் யாரையும் அவர் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மயில்சாமி ஒரு விஷயம் பண்ணார்!. ஆடிப் போயிட்டேன்!.. ஆர்.ஜே.பாலாஜி சொன்ன செம மேட்டர்!..

அடுத்த ஆறு மாதத்திற்கு நடிகர் அஜித் ரேஸிங்கில் ஆர்வம் காட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆறு மாதம் கழித்து அவர் மீண்டும் சினிமாவிற்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தின் ரேஸிங் காரை அறிமுகம் செய்து வருகிறார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. காரை சுற்றி காட்டும் அஜித் அதில் அமர்ந்து காரின் அமைப்பை செக் செய்வதையும் வீடியோவில் காட்டப்படுகிறது. தன்னுடைய சால்ட் அண்ட் பெப்பர் கை விட்டு வெள்ளை முடியுடன் ஸ்மார்ட் ஆக அவர் நிற்பதை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வீடியோவைக் காண: https://x.com/MovieTamil4/status/1861699846303826275

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.