கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படுறதுக்கு அதுவே பெட்டர்… வனிதா சொல்லும் வேற லெவல் டிப்ஸ்

Published on: November 27, 2024
vanitha
---Advertisement---

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவரது அம்மா பிரபல நடிகை மஞ்சுளா. எம்ஜிஆர் படங்களில் ஜோடியாக நடித்து அசத்தியவர். 1995ல விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு ராஜ்கிரணுடன் இணைந்து மாணிக்கம் படத்தில் நடித்தார்.

திரையுலகப் பயணம் இவருக்கு சரிவர அமையாததால் தொலைக்காட்சி பக்கம் சென்றார்.  கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி, சண்டே சமையல் என சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2010ல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவருக்கு 2 தடவை திருமணம் முடிந்து விவாகரத்தில் முடிந்தது.

Also read: Surya 44: சூர்யானு சொன்னா குடுப்பாங்கனு பார்த்தா இப்படி ஆகிப் போச்சே.. சூர்யா 44 பட தலைப்புக்கு வந்த சிக்கல்

வனிதா தனது 18வது வயதில் ஆகாஷ் என்பவரைக் காதலித்து கல்யாணம் செய்தார். 7வருடம் இந்த பந்தம் நீடித்தது. அதன்பிறகு விவாகரத்து ஆனது. இவர்களுக்கு விஜயஸ்ரீ ஹரி, ஜோவிகா என ஒரு மகனும், மகளும் உள்ளனர். அந்த பிள்ளைகள் அவர்களது விருப்பப்படி தந்தையுடனே வளர்ந்து வருகிறார்கள்.

அதன்பிறகு ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 5 வருடங்களில் விவாகரத்து ஆனார். அவர்களுக்கு ஜெயனித்தா என்ற மகள் உள்ளார். 3வதாக பீட்டர்பால் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பாம். அதுவும் பிரேக்கப் ஆனதாம். அப்பா தான் தனது முதல் 2 திருமணங்கள் விவாகரத்துக்கும் காரணம் என்று சொல்லி இருக்கிறார்.

கடைசியில் என்னன்னு பார்த்தா அப்பா மாதிரி குணம் கொண்டவர் எனக்குக் கணவராக அமையவில்லை. அதனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விவாகரத்துல எனது திருமணங்கள் முடிந்துள்ளது என்றும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் மனதில் தனக்கு சரி என்று படும் கருத்தைத் துணிச்சலாக சொல்பவர் வனிதா என்று சொல்லலாம்.

vanitha robert
vanitha robert

அதனால் தானோ என்னவோ வாழ்க்கையே விரக்தியாகி விட்டது இவருக்கு. அதனால் தான் இப்போது இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்கள் ஆண்கள் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பெண்கள் பெண்கள் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. யோசிச்சு அப்படி பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோணுது.

Also read: நான் ஒன்னு நினைச்சேன்!. ஆனா வேற ஒன்னு இருந்தது!. விடுதலை 2 பற்றி பேசும் இளையராஜா!…

‘ஏம்மா நீ ஒரு பொண்ணோட காதல்ல விழலன்னு என் பொண்ணுங்க திட்றாங்க. ஆனால் புத்தி அப்படி போகல. அதுதான் பிரச்சனையே. ஓரின திருமணங்கள் நிஜமாகவே நல்லா இருக்கிறது. ஆப்போசிட் ஜென்டர் திருமணம் பண்ணும்போது தான் பிரச்சனை வருதுன்னு எனக்கு தோணுது என்கிறார் வனிதா.

சமீபத்தில் கூட டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் நான்காவதாக திருமணம் என்று வனிதா குறித்த செய்திகள் வந்தன. ஆனால் கடைசியில் தான் அது ஒரு படம் சம்பந்தமான செய்தி என தெரிய வந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது அந்தகன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.