புறநானூறு திரைப்படம் நடிகர் சூர்யாவின் கையை விட்டு சென்றதற்கு சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா.
இதையும் படிங்க: புகழ் கொடுத்த மக்களுக்கு அரசியல் வந்துதான் செய்யனுமா? நல்ல மனசுக்கு உதாரணமா வாழும் ஜனகராஜ்
இந்த திரைப்படம் நிச்சயம் நடிகர் சூர்யாவின் கெரியேரில் முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் படக்குழுவினர் கொடுத்த பில்டப்புக்கு படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த திரைப்படம் தோல்வியைத் தாண்டி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் இப்படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். இருப்பினும் நடிகர் சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் தொடங்கி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா கைவிட்ட திரைப்படம் புறநானூறு. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க இருந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் பிறகு சில பல காரணங்களால் சூர்யா அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறியிருந்தார்கள்.
அதற்கு காரணம் நடிகர் சூர்யா கர்ணா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருந்ததுதான். கர்ணா திரைப்படம் ஒரு ஹிந்தி படம். அதே சமயத்தில் புறநானூறு திரைப்படம் ஹிந்தி திணிப்பை குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் திரைப்படம்.
பாலிவுட்ல அறிமுகமாகும் சமயத்தில் இது போன்ற திரைப்படங்களில் நடித்தால் சிக்கல் ஏற்படும் என்று நடிகை ஜோதிகாவும் சூர்யாவின் தம்பி கார்த்தியும் தெரிவித்ததாகவும், அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் சூர்யா இந்த திரைப்படத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
இதையும் படிங்க: மருமகள் முதல் மூன்று முடிச்சு வரை… சன் டிவி டாப் 5 தொடர்களில் இன்றைய அப்டேட்ஸ்…
தற்போது அவரே சென்று சுதா கொங்கராவிடம் இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய நிலையில் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதற்கு முடிவு செய்து விட்டதாகவும், இனி உங்களை வைத்து இயக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.





