விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜெயம் ரவி. ஒவ்வொரு திரைப்படத்தையும் மிக கவனமாக தேர்வு செய்து நடித்து வருகின்றார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவுமே அந்த அளவுக்கு வெற்றி படங்களாக அமையவில்லை. கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே இவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: கங்குவா ஓடலனா என்ன!.. ஹேப்பி லுக்கில் சூர்யா!. வைரலாகும் சூர்யா 45 பட பூஜை புகைப்படங்கள்!..
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திரையுலகில் இருக்கும் அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் 15 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள்.
நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஆர்த்தி ரவி மறுப்பு தெரிவித்து பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஜெயம் ரவி தன்னிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு. எனக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். தன் மனைவிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நிலை நீதிமன்றத்தில் கடந்து சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஆர்த்தி ரவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கை தள்ளி வைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அப்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 7ஆம் தேதி தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.
இதையும் படிங்க: போற போக்குல விஜய் சேதுபதியை போட்டுவிட்ட இளையராஜா?!… என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்களே!…
நடிகர் ஜெயம் ரவியின் இந்த முடிவுக்கு அவரது மனைவி ஆர்த்தி ரவி தான் காரணம் என்றும், அவர் செய்த டார்ச்சர் காரணமாகத்தான் ஜெயம் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கின்றார் என்று சமூக வலைதள பக்கங்களில் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்த நிலையில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் பலரும் உங்களின் குழந்தைகளுக்காகவாவது ஆர்த்தியுடன் இணைந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது பிரிந்து செல்வார்களா? என்பது விரைவில் தெரியவரும்.
