SK24: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். 50 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக மாறும் அளவுக்கு இவரின் படங்கள் வசூலை அள்ளுகிறது. அதிலும், சமீபத்தில் வெளியான அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டியது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளிவந்த இந்த திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய உண்மை கதையாகும். இந்த படத்தில் சாய் பல்லவியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: தலக்கணம் ஏறிப் போய் அலையும் நயன்தாரா! திடீரென ஏன் இவருக்கு இவ்வளவு கோபம்?
அவரின் நடிப்பை திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டினார்கள். சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படமும் 300 கோடி வசூலை தொட்டது இல்லை. ஏற்கனவே கோட் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வது போன்ற காட்சி ஒரு குறியீடாகவே பார்க்கப்பட்டது. அமரன் பட வெற்றி அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறது.
முன்பெல்லாம் காதல் கலந்த காமெடி கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயேன் இனிமேல் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய இயக்குனர்கள் ஆகியோருடன் கைகோர்க்க முடிவெடுத்திருக்கிறார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படமாகும். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார்.
அதோடு, பாகுபலி புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விரைவில் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘சந்திரமுகி’யோடு மோதிய ஆர்யா படம்.. ரிசல்டை நினைச்சு விஷ்ணுவர்தன் செய்த காரியம்
