விக்ரம் வசூலை முறியடித்த அமரன்!.. ஆனாலும் வட போச்சே ஃபீலிங்கில் ஏ.ஆர்.முருகதாஸ்!..

Published on: November 29, 2024
vikram
---Advertisement---

அமரன் திரைப்படம் ஓவர்சீஸில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வசூலை மிஞ்சி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: சத்தமில்லாமல் உதவி செய்த விஜய்!.. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது தளபதி?..

கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. ஒருவர் கூட இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கூறாத அளவிற்கு படத்தை சிறப்பாக இயக்கி இருக்கின்றார் ராஜ்குமார்.

இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதேபோல் அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து அனைவரது மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார் சாய்பல்லவி. இந்த திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் 100 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

amaran
amaran

தற்போது ஐந்தாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. விரைவில் 350 கோடியை தொட்டுவிடும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அமரன் திரைப்படம் வெளியானது முதலே பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்களின் சாதனையை தொடர்ந்து முறியடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சாதனையை படைத்திருக்கின்றது.

அமரன் திரைப்படம் ஓவர்சீஸில் மட்டும் 105 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றதாம். இந்த வசூல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் வசூலை விட அதிகம் என்று கூறப்படுகின்றது. விக்ரம் திரைப்படம் ஓவர்சீஸில் 101 கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் அந்த சாதனையை அமரன் திரைப்படம் முறியடித்து இருக்கின்றது.

இதையும் படிங்க: சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..

இதில் பலருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 23 திரைப்படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனென்றால் எஸ்கே 23 திரைப்படம் ஆரம்பித்த சிறுது நாட்களிலேயே ஓவர்சீஸ்-க்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

அதாவது இந்த படத்தை வெறும் 15 கோடி ரூபாய்க்கு தான் ஓவர்சீஸ் வெளியிட்டிருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது அமரன் திரைப்படம் வெளிநாடுகளில் சக்க போடு போட்டு வரும் நிலையில் இவ்வளவு குறைந்த தொகைக்கு நாம் விற்பனை செய்து விட்டோமே என்று மிகுந்த சோகத்தில் இருக்கின்றார்களாம் எஸ் கே 23 படத்தின் தயாரிப்பாளர்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.