latest news
அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
இப்போது சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுவது விடாமுயற்சி படத்தின் டீசர் மட்டும்தான். யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் டீசர் வெளியாகி அனைவர் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான நேரம் 11.08. இது கண்டிப்பாக ஒரு சென்டிமென்ட்டான நேரமாக தான் இருக்கும்.
ஏற்கனவே அஜித் சென்டிமென்ட் பார்க்கக்கூடிய நபர்தான். அதனால் அந்த ஒரு காரணத்தினால் கூட இருக்கும். ஏற்கனவே இந்த மாதிரி வேலையை டி ராஜேந்தர் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய லக்கி நம்பர் 9. அவர் படங்களை ரிலீஸ் செய்யும் தேதியிலிருந்து நேரம் வரை கூட்டினால் 9 வரும் மாதிரி தேர்வு செய்வார். ஆனால் அப்படி தேர்வு செய்த படங்கள் ஜெயித்ததா என்றால் இல்லை.
இதையும் படிங்க: 2025 லவ்வர்ஸ் டே-வுக்கு ரிலீஸாகும் புதிய படங்களின் லிஸ்ட்!.. கவினின் படம் மட்டும் டவுட்!…
அதில் விதிவிலக்கான படம் மாநாடு. எந்த ஒரு சென்டிமென்ட்டும் பார்க்காமல் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் அஜித் மாதிரி பெரிய நடிகர்கள் இந்த சென்டிமென்டை என்ன காரணத்தினாலயோ தொடர்ந்து விரும்புகிறார்கள். அதுதான் இந்த மாதிரி 11 .08 என்ற நேரத்தில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள் .
அது நல்ல வேளையாக ரசிகர்களும் பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். என்னதான் ஒரு டீசர் வெளியானாலும் ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுக்க வேண்டும் என்றுதான் நடிகர்கள் விரும்புவார்கள். அது இந்த படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த சென்டிமென்ட் என்பது அஜித் அவருக்கான இடத்திலிருந்து யோசித்து முடிவெடுக்கிறாரா அல்லது வேறு மாதிரி எப்படி இதை யோசிக்கிறார்கள் என்ற கேள்விக்கும் அந்தனன் கூறிய பதில்:
இதையும் படிங்க: சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..
இதற்காக வட்ட மேஜை மாநாடு எல்லாம் நடத்த மாட்டார்கள். சுரேஷ் சந்திராவுக்கு ஒரே ஒரு போன் செய்து இந்த நேரத்தில் ரிலீஸ் செய்யுங்கள் என அஜித் சொல்லி இருக்கலாம். உடனே சுரேஷ் சந்திராவும் சார் இப்படி நினைக்கிறார் என சொல்லி இருக்கலாம். இப்படித்தான் நடந்திருக்கும் என கூறினார். எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென இந்த டீசர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதற்கும் அந்தணன் கூறும்போது இப்பொழுது பெரிய நடிகர்களின் ட்ரெய்லர் வெளியானாலே அதை ஒரு குறிப்பிட்ட தொகையில் தியேட்டர் உரிமையாளர்கள் விற்று விடுகிறார்கள். அதற்கென தனியாக டிக்கெட் விலை நிர்ணயித்து விற்று விடுகிறார்கள். அதைக் கூட அஜித் விரும்பி இருக்க மாட்டார் .அதனால் தான் இப்படி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டீசர் வெளியாகி இருக்கிறது என அந்தணன் கூறினார்.