Vijayashanthi: தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் விஜயசாந்தி. ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா. அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
ஆனால், உன்னிடம் திறமை இருக்கு நீ நடிப்பதை நிறுத்தக்கூடாது என அவரின் கணவர் அன்பு கட்டளை போட்டதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். அப்போதுதான் விஜயசாந்தி ஐபிஎஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியை முன்னுதாரணமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
இப்படம் முதலில் தெலுங்கில்தான் உருவானது. அங்கு சூப்பர் ஹிட் அடிக்கவே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இங்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் தொடர்ந்து போலீஸ் அதிகாரி வேடத்தில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். அந்த எல்லா படமுமே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
தடயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் ஆந்திர அரசியலிலும் இறங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறினார். இப்போது அவர் சினிமாவில் நடிப்பதில்லை. 90களிலேயே லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இருவருக்கு இருந்தது. பி.வாசுவின் இயக்கத்தில் இவர் நடித்த படம்தான் மன்னன்.

திமிர் பிடித்த பணக்கார முதலாளியாக இருக்கும் விஜயசாந்தியின் கொட்டத்தை அவரின் ஃபேக்டரியில் பணிபுரியும் ரஜினி அடக்குவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்த விஜயசாந்தி லேடி சூப்பர்ஸ்டார் என்கிற மமதையில் மிகவும் திமிராக நடந்து கொண்டு எல்லோரையும் திட்டி வந்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த பி.வாசு ‘ இங்க ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் மட்டும்தான். விஜய சாந்தி கையெழுத்து போட்ட அக்ரிமெண்ட் என்கிட்ட இருக்கு. இதே மாதிரி நடந்துக்கிட்டா அவர் வேற எந்த படத்திலும் நடிக்க முடியாது’ என சொல்ல ஆடிப்போன விஜயசாந்தி அதன்பின் பந்தா பண்ணாமல் ஒழுங்காக நடித்து கொடுத்தாராம்.
இதையும் படிங்க: சீனாவிலும் வசூலை அள்ளும் மகாராஜா!.. 2 நாளில் எவ்வளவு கோடி தெரியுமா?…





