Cinema News
தனுஷின் புது படத்துக்கு எகிறிய பட்ஜெட்!.. இவ்வளவு கோடியா?!…
Kubera: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் சினிமாவையும், நடிப்பையும் கற்றுக்கொண்டவர். காதல் கொண்டேன், புதுப்பேட்டை என ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்தவர் இவர்.
ஒருபக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள அழுத்தமான கதைகளிலும், ஒருபக்கம் மசாலா கமர்ஷியல் படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்கள் அவருக்கு விருதுகளை பெற்று தந்தது.
இதில், ஆடுகளம் மற்றும் அசுரனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல், மாரி செல்வராஜுடன் இணைந்து தனுஷ் நடித்த கர்ணன் படமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருபக்கம், பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார் தனுஷ். இந்த படத்தில் கதையின் நாயகனாக ராஜ்கிரண் நடித்திருந்தார்.
அதன்பின் சில வருடங்கள் கழித்து ராயன் என்கிற படத்தையும் இயக்கி நடித்தார். இந்த படமும் நல்ல வசூலை பெற்றது. ஒருபக்கம், தனது சகோதரி மகனை ஹீரோவாக போட்டு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதேபோல், இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இந்த படத்தில் நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம், தெலுங்கில் குபேரா என்கிற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய வேடத்த்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் பொதுவாக அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுக்க மாட்டார்கள். கோலிவுட்டை ஒப்பிட்டால் அங்கு நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறைவுதான். இப்போது பிரபாஸ், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு போன்றவர்களின் படங்கள் பேன் இண்டியா படங்களாக மாறியிருப்பதால் மட்டுமே அவர்களின் சம்பளம் அதிகரித்திருக்கிறது.
பாகுபலி, பாகுபலி 2 என 2 படங்களில் 4 வருடங்கள் நடித்ததற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் வெறும் 25 கோடிதான். இப்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தை 90 கோடிகளில் முடித்துவிட வேண்டும் என்றுதான் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்போது 120 கோடி யாக அதிகரித்துவிட்டதாம். டோலிவுட்டில் இது அதிகமான பட்ஜெட் படம் என சொல்லப்படுகிறது. தனுஷ் படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு காரணமாகவே துணிந்து இவ்வளவு செலவு செய்கிறார்கள் என கூறப்படுகிறது.
மொத்தத்தில் படத்திற்கு படம் தனுஷ் நடிக்கும் படங்களின் பட்ஜெட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல!.. சிவகார்த்திகேயன் பற்றி நெகிழும் தாடி பாலாஜி!..