Shobitha shivanna: சினிமாவை தாண்டியும் நடிகர், நடிகைகளை தங்களின் ரோல் மாடலாக எடுத்துக் கொள்பவர்கள் இந்தியாவில் அதிகம். அதனால் தான் அவர்களின் விவாகரத்து முடிவுகள், உடல்நல பிரச்சினைகள், தோல்விகள், மரணங்கள் ரசிகர்களையும் கணிசமாக பாதிக்கின்றன.
குறிப்பாக நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் ரசிகர்களை உலுக்கி விடுகிறது. ஓடிடி வருகையால் உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகளை உள்ளங்கையில் பார்த்து ரசிக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். குறிப்பாக தென்னிந்திய நடிகைகளுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

இந்தநிலையில் ரசிகர்களின் பேவரைட் கன்னட நடிகை சோபிதா ஷிவன்னா நேற்று ஹைதாராபத்தில் உள்ள தன்னுடைய அபார்ட்மெண்டில் தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்ட விவரம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஹைதராபாத்தைசேர்ந்த சுதீர் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சோபிதா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சுமார் 12க்கும் அதிகமான சீரியல்களில் நடித்துவந்த சோபிதாவின் மரணம் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நடுவே இன்ஸ்டாகிராமில் இருந்து கணவரின் புகைப்படத்தை சமீபத்தில் நீக்கிய சோபிதா சமீபகாலமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலும், மிகுந்த அமைதியாக இருந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கணவருக்கும், அவருக்கும் நடுவில் எதுவும் பிரச்சினையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘இனி நடிக்க மாட்டேன்’… 37 வயசுல ‘இப்படி’ ஒரு முடிவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
