Cinema News
தனுஷ் மட்டும்தான் பண்ணுவாரா?!.. நானும் இறங்குறேன்!.. வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட சிம்பு!…
Actor simbu: தனுஷ் சினிமாவுக்கு வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே சினிமாவுக்கு வந்தவர் சிம்பு. அவரின் அப்பா டி.ராஜேந்தர் சிம்பு சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் கொடுத்தார். சிறு வயதிலேயே பல ஹிட் படங்களை சிம்பு கொடுத்திருக்கிறார்.
ரஜினி ஸ்டைல்:
டீன் ஏஜை எட்டியபோது காதல் அழிவதில்லை என்கிற படத்தில் சிம்புவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் டி.ஆர். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். சிம்புவுக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது. ரஜினியை போலவே பல ஸ்டைகளை செய்து வந்தார் சிம்பு.
விரலிலேயே வித்தைக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் அதை எல்லோரும் நக்கலடிக்கவே விட்டுவிட்டார். அதன்பின் வாலை சுருட்டிக்கொண்டி விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். அந்த படம் சிம்புவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
தக் லைப் சிம்பு
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து சிம்புவுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. என்னதான் காதல் மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தாலும் பன்ச் வசனம் மற்றும் மாஸ் காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்களிலில் நடிப்பதுதான் சிம்புவின் விருப்பம்.
சிம்புவின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. மணிரத்னம் இயகக்த்தில் கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்திருக்கிறார். இது சிம்புவின் 48வது திரைப்படமாகும் இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது சிம்புவின் 49வது திரைப்படமாகும்.
மீண்டும் இயக்கம்:
ஒருபக்கம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால, அது பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதற்கிடையில் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கலாம் என்கிற முடிவுக்கு சிம்பு வந்திருக்கிறாராம். அனேகமாக அது மன்மதன் 2-வாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
தனுஷ் ஒருபக்கம் நடிப்பு, இயக்கம் என கலக்கி வருவதால் நாமும் இயக்கத்தில் இறங்குவோம் என சிம்பு முடிவெடுத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ’க்களை அனுப்பிய நபர்… அனிதா சம்பத் என்ன பண்ணாருன்னு பாருங்க!