Connect with us
kanguva

Cinema News

என்னடா இது கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. ரொம்ப லேட் பிக்கப்பா இருக்கேப்பா?!..

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் திடீரென்று சமூகவலைதள பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.

Actor Suriya: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. இப்படம் சூர்யாவின் கெரியரில் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடுமையான விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: மனுஷன் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு போலயே!.. அந்த இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்?..

கங்குவா திரைப்படம்:

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2 வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

kanguva

kanguva

கடுமையான விமர்சனம்:

படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட காரணத்தால் படக்குழுவினர் இந்த திரைப்படத்திற்கு பல மொழிகளில் புரமோஷன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மேடைக்கு மேடை படம் குறித்து ஆஹா ஓஹோ என்று தண்டோராடித்தார்கள். இதனால் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. படம் பாகுபலி போல் இருக்கப்போகின்றது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

வெளியான முதல் நாளிலிருந்து தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் படம் தோல்வியை சந்தித்தது. சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அப்படியும் கூட கங்குவா படத்திற்கு வந்து கொண்டிருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் நின்ற பாடில்லை

ட்ரெண்டிங்கில் கங்குவா:

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கங்குவா படம் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. ட்விட்டரில் கங்குவா என்கின்ற ஹேஸ்டேக் தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. திடீரென்று கங்குவா படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் இணையதள பக்கங்களில் குவிந்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் கங்குவா திரைப்படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியானது தான்.

kanguva

kanguva

இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி ஓடிடி-ல் வெளியாகின்றது. அதற்கு முன்னதாகவே ஹெச்டி பிரிண்ட் தற்போது வெளியாகிவிட்டது. இதன் மூலமாக படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு கங்குவா படம் இல்லை. குறைகள் இருந்தாலும் மோசமான விமர்சனங்களை பெறும் படமாக கங்குவா இல்லை என்பது தற்போது ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.

இதையும் படிங்க: குணா படத்தில் கவனிக்க மறந்த விஷயங்கள்… அந்த நடிகைக்குப் பிறகு தன்னைக் கருப்பாக்கிய கமல்

மேலும் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சி. ரசிகர்கள் இந்த அளவுக்கு ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது ட்விட்டரில் பலரின் கருத்தாக இருந்து வருகின்றது. இந்த கருத்தை பார்த்த பலரும் திரைப்படம் வெளியான போது இந்த விமர்சனத்தை கொடுத்திருந்தால் படம் இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருக்க தேவையில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top