Cinema News
இப்படி அடிச்சா என்னதான் பண்றது?!.. முருகதாஸிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் எஸ்.கே!..
Sivakarthikeyan: கடந்த 10 வருடங்களில் வேகமாக முன்னேறி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக இருந்து, இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து, சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறியவர் இவர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சொந்த படம் எடுக்க ஆசைப்பட்டு கடனாளி ஆகவும் மாறினார். கிட்டத்தட்ட 100 கோடி அளவுக்கு அவருக்கு கடன் ஆனது. இதனால், அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது பஞ்சாயத்து நடக்கும்.
இதையும் படிங்க: எக்ஸ் விட்டு ஓடியதுக்கு இதான் காரணமா? விக்னேஷ் சிவன் உருட்டிய பொய்.. அம்பலப்படுத்திய ரசிகர்கள்
எனவே, சம்பளத்தில் விட்டு கொடுத்தோ, அல்லது சில கோடிகளை கையில் இருந்து கொடுத்தோ, ஒரு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டோ அவரின் படங்களை ரிலீஸ் செய்து வந்தார். அயலான் படத்தில் நடித்ததற்கு கூட அவர் சம்பளமே வாங்கவில்லை. கடனை அடைக்க கொடுத்துவிட்டார்.
தற்போது கடனிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதோடு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட அடித்திருக்கிறது. இந்த படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தின் வசூல் எஸ்.கே. கெரியர் மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
அமரன் படத்தில் நடிப்பதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். பாதி எடுத்த நிலையில், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தை முடித்துவிட்டு அவர் வருவதற்கு 2025ம் வருடம் மார்ச் மாதம் ஆகிவிடும் என சொல்கிறார்கள். 4 மாதங்கள் எப்படி சும்மா இருப்பது என யோசித்த எஸ்.கே, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை அழைத்து உடனே ஷூட்டிங் போலாம் என பேசியிருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு பின்னரே மீண்டும் முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இதையும் படிங்க: என்னடா இது கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. ரொம்ப லேட் பிக்கப்பா இருக்கேப்பா?!..