Cinema News
நாதாரியால் வராமல் போன ஊதாரி…. பொங்கி எழுந்த தயாரிப்பாளர்!
ஊதாரி என்ற படம் ரிலீஸ் ஆகலை. அதுக்கு என்ன காரணம்? என தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாலாஜி பிரபு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
எப்படி சொல்றதுன்னு தெரியல. அதாவது ஒரு நாதாரியை டைரக்டரா போட்டதனால அந்தப் படத்தை இன்னைக்கு வரைக்கும் என்னால ரிலீஸ் பண்ண முடியல. அது ஒரு தப்பான முடிவு. நான் எப்படி எடுத்தேன்னு தெரியல. தயாரிப்பாளர் சேது கந்தசாமி சேது படத்தை எடுத்து முடிக்கிறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்ததுன்னே சொல்லலாம்.
சேது
அப்புறம் படம் ரீச் ஆனதும் பாலா பெரிய டைரக்டர் ஆகிறார். ஆனா தயாரிப்பாளரை யாரும் கண்டுக்கலை. மறுபடியும் பாலா மாதிரி ஒரு டைரக்டரை அறிமுகப்படுத்தலாம்னு நினைக்கிறாரு. அப்போ 100 பேர் வரைக்கும் இவருக்கிட்ட வந்து கதை சொல்றாங்க. 101வது ஆளா நான் சொன்ன ஊதாரி படத்து டைரக்டர் நாதாரி வந்து இவரோட ஆபீஸ்ல உட்காருறாரு.
கும்மாளம்
Also read: நான் சினிமாவில் இருந்து எப்பயோ விலகி இருப்பேன்!.. என்ன எஸ்கே இப்படி சொல்லிட்டாரு!..
ஒரு கதையை சொல்லி கன்வினியன்ஸ் பண்றாரு. சேதுவோட நல்ல ஓடிடும். நீங்க கவலைப்படாதீங்கன்னு சம்மதிக்க வச்சிடறாரு. தயாரிப்பாளரும் அட்வான்ஸ் கொடுத்து சூட்டிங் ஆரம்பிக்கிறாரு. ஊட்டியில கதை. சொல்ல மறந்த கதை பட நாயகி ரதிக்கு கும்மாளம்தான் முதல் படம். ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது சொல்ல மறந்த கதை. நாலு பேரு பிரண்ட்ஸ் மாதிரி கதை. ஊட்டில 35 நாள் எடுக்குறாங்க. அந்த தயாரிப்பாளர் எங்கிட்ட சொல்றாரு.
எதுவுமே டைரக்டருக்குத் தெரியல தம்பி. சும்மா எல் ஷேப்ல ஒரு பிரேம் வைக்காரு. இப்படி பண்ணுங்க தம்பி. அப்படி பண்ணுங்க தம்பிங்கறாரு. காலைல 3.30 மணிக்கு நான் தான் எல்லாரையும் எழுப்பி விடறேன்னு வருத்தப்பட்டு சொன்னாரு. ஆனா படத்தை ஒரு வழியா முடிச்சிடறாரு.
பர்ஸ்ட் காபியைப் போட்டுப் பார்த்தா ஒரு காசுக்குத் தேறாது. தியேட்டர்ல ரிலீஸ் பண்ணதும் ஒரு ரூபா தேறல. அவ்வளவு மோசமான படம். அந்த நாதாரி டைரக்டர் இந்த தயாரிப்பாளரைக் கும்மு கும்மி ஒரு மூலையில உட்கார வச்சிட்டாங்க. அந்தப் படம் பேரு கும்மாளம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கந்தசாமி
2002ல் சுகி எஸ்.மூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் கும்மாளம். இந்தப் படத்தில் தான் சொல்ல மறந்த கதை படத்தின் கதாநாயகி ரதி நடித்துள்ளார். கதாநாயகனாக மிதுன் தேஜஸ்வி நடித்துள்ளார். படம் ஒரு பைசா கூட வசூலாகவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்தவர் சேது படத்தைத் தயாரித்த கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு மதுரையில் இருந்த 9 வீடுகளையும் விற்று விட்டாராம்.
ஆனால் கடைசி வரை அந்த இயக்குனரின் பெயரை பாலாஜி பிரபு சொல்லவே இல்லை. அவரைச் சொன்னா அது எனக்கே அசிங்கம்னு சொல்லி விட்டார். தொடர்ந்து ஊதாரி பற்றி இப்படி சொல்கிறார்.
வினோத் கிஷன்
நான் மகான் அல்ல படத்தில் வினோத் கிஷன்னு ஒரு பேரு. அவனை வைத்து ஒரு படம் எடுக்கணும்னு நினைச்சேன். அப்போ நான் சொன்ன இந்த டைரக்டர் நாதாரி எப்படியோ மோப்பம் பிடிச்சி வந்துட்டாரு.
ஊதாரி
எங்கிட்ட அப்படி இப்படின்னு சொல்லி அக்ரிமெண்ட் போட்டுட்டாரு. டிஸ்கஷன்னுக்கு பாண்டிச்சேரி போனாரு. 1லட்சம் கேட்டாரு. ஆனா 50 ஆயிரம் போதும்னு கொடுத்து அனுப்பினேன். பாண்டிச்சேரில போய் டிஸ்கஷனே நடக்கல. கூத்து கும்மாளம் தான் நடந்துருக்கு. கடைசில ஒரு வழியா சூட்டிங்கும் போயாச்சு.
நாதாரி யார்?
Also read: இப்படி அடிச்சா என்னதான் பண்றது?!.. முருகதாஸிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் எஸ்.கே!..
அப்போ நான் சொன்ன ஜூனியர் ஆர்டிஸ்ட்தான் வேணும்னு அடம்பிடிச்சாரு. கந்தசாமில நடந்த விஷயம் எல்லாமே இந்தப் படத்துல நாம் கமிட் ஆனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. ஒரு நம்பிக்கையில தான் புராஜெக்ட்டைக் கொடுத்தேன். 80 லட்சம் சொன்னாரு. ஆனா 2 கோடி ஆகிடுச்சு. கடைசில அதை ரிலீஸ் பண்ண முடியல. அது தேறாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அதை டிராப் பண்ணிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஊதாரி படத்தின் இயக்குனர் ஷக்தி கிருஷ்ணா என்று தெரிய வருகிறது. கும்மாளம் படத்தின் இயக்குனர் பெயருடன் இது ஒத்து வரவில்லை. அதனால் கடைசி வரை அந்த நாதாரி யார் என தெரியாமலேயே போய்விட்டது.