Connect with us
bhagyaraj mgr

Cinema History

பாக்கியராஜிடம் எம்ஜிஆர் சொன்ன கறாரான விஷயம்… அப்படி வந்தது தான் அந்த சூப்பர்ஹிட் படம்!

‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் கே.பாக்கியராஜ். இவர் இயக்கி நடிக்கும் எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் தான். குறிப்பாகத் தாய்மார்களைக் கவரும் விதத்தில் இவரைப் போல யாரும் படம் எடுக்க முடியாது. சொல்ல முடியாத ஒரு விஷயத்தையும் நாசூக்காக சொல்வதில் வல்லவர்.

 கதை அம்சங்கள்

Also read: நாதாரியால் வராமல் போன ஊதாரி…. பொங்கி எழுந்த தயாரிப்பாளர்!

அந்த வகையில் குறிப்பாக கணவன், மனைவி உறவு, முக்கோண காதல் கதை மற்றும் குடும்ப சிக்கல்கள் கொண்ட கதை அம்சங்களை சிறப்பாகக் கொடுப்பார் பாக்கியராஜ். உதாரணமாக முந்தானை முடிச்சு, சுவர் இல்லாத சித்திரங்கள், தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாள்கள் ஆகிய படங்களைச் சொல்லலாம். இது நம்ம ஆளு படத்தில் அவர் கத்தி மேல் நடக்கும் கதை. அதையும் சூப்பர்ஹிட்டாக எடுத்து அசத்தி இருந்தார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்.

அண்ணா நீ என் தெய்வம்

அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இவரிடம் ஒருமுறை கறாரான விஷயத்தைச் சொல்கிறார். அது என்னன்னா எம்ஜிஆர் 1977ல் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படத்தில் நடித்தார். அதுல அவருடன் லதா, நம்பியார்னு பலரும் நடித்து இருந்தார்கள். ஆனால் படம் பாதிக்கு மேல் சூட்டிங் எடுத்த நிலையில் டிராப் ஆனது. ஏன்னா அப்போ எம்ஜிஆர் தேர்தல்ல ஜெயித்து முதல்வர் ஆகி விடுகிறார். அதனால் நடிக்க முடியாமல் போனது.

பாக்கியராஜ் 

k bhagyaraj

k bhagyaraj

அந்தப் படத்துக்காக 12 லட்சம் வரை செலவும் செய்துள்ளார் தயாரிப்பாளர். அதனால் அதை என்ன செய்வதுன்னு யோசித்த நிலையில் பாக்கியராஜை அழைத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரோ பல இயக்குனர்களிடம் அதை என்ன செய்யலாம் என கேட்டுள்ளார். அப்போது பாக்கியராஜ் படத்துக்கு ஏற்ற மாதிரி கதை எழுதி தர்றேன். நல்ல ஆக்ஷன் ஹீரோவை வைத்துப் படமாக்குங்கள் என்றாராம். அந்தச் செய்தி எம்ஜிஆரின் காதுக்கு எட்டியுள்ளது.

எம்ஜிஆர் கறார்

அவர் பாக்கியராஜை அழைத்து ‘இந்தப் படத்தில் நீயே நடிக்கலாமே’ என கேட்டுள்ளார். அதற்கு ‘நான் நடித்தால் அவ்வளவு நல்லா இருக்காது’ என்றாராம் பாக்கியராஜ். உடனே, ‘நீ படத்துல நடிக்கிறதா இருந்தா இந்தப் படத்தை எடு. இல்லன்னா குப்பையில போட்டுருவேன்’னு எம்ஜிஆர் கறாராக சொல்லிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் அந்தத் தயாரிப்பாளருக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன் என்றும் சொல்லி விட்டார்.

அவசர போலீஸ் 100

Avasara police 100

Avasara police 100

எம்ஜிஆரின் பேச்சைத் தட்ட முடியாமல் பாக்கியராஜ் தானே இயக்கி அந்தப் படத்தில் நடித்தார். அது தான் அவசர போலீஸ் 100. படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு படம் பெரும் வெற்றி பெற்றது.

1990ல் பாக்கியராஜ் நடித்து இயக்கிய படம் அவசர போலீஸ் 100. எம்ஜிஆர், பாக்கியராஜ், கௌதமி, சில்க், விஎஸ்.ராகவன், விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு எம்எஸ்.வி. மற்றும் பாக்கியராஜ் இசை அமைத்துள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top