Cinema News
உலகத்தரத்துடன் கூடிய ஆடம்பர அபார்ட்மெண்ட்!.. சென்னையில் குடியேறும் ராஷ்மிகா?!..
Rashimika mandana: கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு ஆந்திரா பக்கம் போனார். அங்கு விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து சில படங்களில் நடித்தார்.
இந்த ஜோடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடமும் பிரபலமானார் ராஷ்மிகா. அதன்பின் மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். டோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்பதில் பூஜா ஹெக்டேவுக்கும் இவருக்கும் இடையே போட்டி உருவானது.
இதையும் படிங்க: ஸ்லிம் உடம்பை காட்டி சூடு ஏத்துறாரே!.. பிகினி உடையில் விருந்து வைக்கும் வேதிகா!…
இப்போதும் அந்த போட்டி இருக்கிறது. அல்லு அர்ஜூடன் இணைந்து ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமாகியிருக்கிறார் ராஷ்மிகா. ஏனெனில், புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது.
வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்த படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட படமாக உருவாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். இவர் நடிப்பில் வெளியான அனிமல் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் புதிய படத்திலும் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, சென்னை, ஹைதராபாத், மும்பை என மாறி மாறி விமானத்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் ஒரு வீட்டை வாங்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் மிகவும் பிரபலமான உலகத்தர வசதிகளுடன் கூடிய ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பை ராஷ்மிகா வாங்க திட்டமிட்டிருக்கிறாராம். அதோடு, விரைவில் சென்னையிலேயே குடியேறவும் அவர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
நடிகர் விஜய தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த தகவலை ராஷ்மிகாவே சென்னையில் நடந்த புஷ்பா 2 விழாவில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படி அடிச்சா என்னதான் பண்றது?!.. முருகதாஸிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் எஸ்.கே!..