Jayam ravi: ஜெயம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் ரவி. தெலுங்கில் ஹிட் அடித்த படத்தின் ரீமேக் இது. இந்த படம் வெற்றியடையவே ஜெயம் என்பது அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. அதன்பின் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். ஜெயம் ரவியின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கும் படங்களாகவே இருக்கிறது. அதாவது ஒரு மினிமம் கேரண்டி உள்ள ஒரு நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இவர் நடித்த கோமாளி படமும், அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் படமும் நல்ல வசூலை பெற்றது. நன்றாக நடனமாடுவர், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பார் என்பதால் இவருக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ரவி நடித்து வெளியான பொன்னியின் செல்வம் படமும் நல்ல வசூலை பெற்றது.
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக ஆர்த்தியின் அம்மா சுஜாதாவின் தயாரிப்பில் சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் லாபம் என்றாலும் தன்னிடம் நஷ்ட கணக்கை மாமியார் காட்டி மோசடி செய்ததாக கூறினார். அதோடு, மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும் அறிவித்தார்.

மேலும், தன் வீட்டு வேலைக்காரர்களுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லை என்றும் தான் செய்யும் செலவுகளுக்கு ஆர்த்தி கணக்கு கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் சொல்லி இருந்தார். அதோடு, தனக்கென தனியாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை. மனைவி ஆர்த்தியுடன் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட மட்டுமே இருப்பதாகவும், அந்த டெபிட் கார்ட் எல்லாம் ஆர்த்தியிடம் இருப்பதாகவும் கூறினார்.
தற்போது மும்பையில் அலுவலகம் ஒன்றை துவங்கி அங்கிருந்து சினிமாவில் நடிக்கும் பணிகளை செய்து வருகிறார். அதோடு, ரெட்ட தல, டிமாண்டி காலணி போன்ற படங்களை தயாரித்த பிடிஜி யூனிவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி சில கோடிகள் அட்வான்ஸும் வாங்கி இருக்கிறார். ஒரு படத்திற்கு 16 கோடி என சம்பளம் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: உலகத்தரத்துடன் கூடிய ஆடம்பர அபார்ட்மெண்ட்!.. சென்னையில் குடியேறும் ராஷ்மிகா?!..
