தலித்னா இப்படித்தான் இருப்பாங்களா? ஆதங்கத்துடன் கேட்கும் பா.ரஞ்சித்

Published on: December 2, 2024
pa.ranjith
---Advertisement---

தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழ்சினிமா உலகில் இவரது படங்களைப் பார்த்தால் கிட்டத்தட்ட தலித் இன மக்களைக் குறித்து எடுத்ததாகவே இருக்கும். அவர்களுடைய பிரச்சனைகளை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

மெட்ராஸ்

Also read: செலவுக்கு காசு இல்ல!. 2 படங்களை தட்டி தூக்கி கோடிகளை குவிக்கும் ஜெயம் ரவி!…

அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்தன. இந்தப் படத்துக்கு சிறந்த இயக்குனருக்கான சீமா விருது கிடைத்தது. தொடர்ந்து மெட்ராஸ் படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பைக் கொடுத்தது. இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

ரஜினியின் படம்

kabali
kabali

படத்தின் வெற்றி இவருக்கு ரஜினியின் படம் இயக்க வாய்ப்பு தேடித் தந்தது. அதுதான் கபாலி, காலா படங்கள். சார்பட்டா பரம்பரை படமும் அவருக்கு நல்ல ஒரு பெயரைத் தேடிக் கொடுத்தது. அதே நேரம் தொடர்ந்து அவர் மீது சாதிய ரீதியான இயக்குனர் என்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது பா.ரஞ்சித் தலித் இன மக்கள் குறித்தும் அவர்களது நிறம் குறித்தும் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். அது என்னன்னு பார்ப்போம்.

தலித் கருப்பா?

நான் கருப்புக்கு எதிரானவன் இல்லை. மெட்ராஸ் படத்துல ஏன் வெள்ளை நிற பெண்ணை உங்க படத்தில் நடிக்க வைக்கிறீங்கன்னு கேட்டாங்க. தலித் இனத்தைச் சேர்ந்தவங்க கலர் இல்லைன்னு சொன்னாங்க. அப்போ நான் செம காண்டு ஆனேன். என்னுடைய பாட்டி வெள்ளையாகத் தான் இருப்பாங்க.

உடைக்க வேண்டும் 

madras
madras

நான் கருப்புக்கு எதிரானவன் கிடையாது. காலாகாலமாக எல்லோரும் தலித் கருப்பு என்று நினைத்ததை நான் உடைக்க நினைத்தேன். நான் என்னுடைய படங்களில் எப்போதும் பெண்களை உயர்த்தி தான் பேசுவேன். தலித் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாரும் சொல்வதை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இசைவாணி 

2019ல் பிக்பாஸ் புகழ் கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ பண்பாட்டு மையத்தின் சார்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ யம் சாரி ஐயப்பா பாடலைப் பாடி இருந்தார். இது சர்ச்சைக்குள்ளாகி புகார் வரை சென்றுள்ளது. இது இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது. ஐயப்ப பக்தர்களின் உணர்வை புண்படுத்துகிறது.

Also read: பாக்கியராஜிடம் எம்ஜிஆர் சொன்ன கறாரான விஷயம்… அப்படி வந்தது தான் அந்த சூப்பர்ஹிட் படம்!

குறிப்பாக பிற மதங்களிடையே கலவரத்தையும் தூண்டும் வகையில் உள்ளதாக சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் பா.ரஞ்சித் தற்போது சர்சையில் சிக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.