நடிகர் அஜித் இயக்குனர் சிறுத்தை சிவாவை அழைத்து ஆறுதல் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர் அஜித் மற்றொருபுறம் கார் ரேசிங் தொடர்பான பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இதையும் படிங்க: அடி மேல் அடிவாங்கும் லைகா.. கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி.. எங்க போய் முடியப்போகுதோ..
விடாமுயற்சி:
நடிகர் அஜித் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளான நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகின்றது.

குட் பேட் அக்லி:
நடிகர் அஜித் பொதுவாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் மற்றொரு திரைப்படத்தில் கமிட்டாவார். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
சிறுத்தை சிவாக்கு ஆறுதல் சொன்ன அஜித்:
நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படங்களை முடித்த கையோடு கார் ரேஸில் பங்கேற்க இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கங்குவா திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இயக்குனர் சிறுத்தை சிவா மிகுந்த சோகத்தில் இருக்கின்றார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை மிகவும் மெனக்கட்டு எடுத்திருந்தார் சிறுத்தை சிவா. ஆனால் படத்தின் கதையில் அவர் கோட்டை விட்டுவிட்டார் என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது.

கங்குவா படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சிறுத்தை சிவா தான் என்று பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பிலிருந்து இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு ஆறுதல் கூறியிருக்கின்றாராம். சிறுத்தை சிவாவை தைரியமாக இருங்கள் என்றும், எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதையும் படிங்க: உலகத்தரத்துடன் கூடிய ஆடம்பர அபார்ட்மெண்ட்!.. சென்னையில் குடியேறும் ராஷ்மிகா?!..
ரசிகர்கள் அச்சம்:
ஏற்கனவே சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் படம் உருவாக உள்ள நிலையில் கங்குவா படத்தின் பாதிப்பு அந்த படத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக நடிகர் அஜித் இப்படி கூறியிருப்பதாக சினிமா விமர்சனங்கள் கூறிவருகிறார்கள். இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏற்கனவே சிறுத்தை சிவா ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கங்குவா படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் நிச்சயம் அவருடன் இணைந்து அஜித் படம் பண்ண வேண்டுமா? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
