அந்த விஷயத்தால் ரொம்ப நொந்துப்போன வெற்றிமாறன்!.. வடசென்னை 2 வருமா? வராதா?!..

Published on: December 3, 2024
vetrimaran
---Advertisement---

இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை எடுக்கும் முடிவை கைவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இயக்குனர் வெற்றிமாறன்:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து தனக்கு என ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது திரைப்படங்கள் என்றாலே அது நிச்சயம் வெற்றிதான் என்ற அளவிற்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார். நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கக்கூடிய ஒரு இயக்குனர்.

இதையும் படிங்க: இதனாலதான் நேரில் வரல!.. தப்பா எடுத்துக்காதீங்க.. திடீரென்று விளக்கம் கொடுத்த நடிகர் விஜய்!..

வடசென்னை திரைப்படம்:

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் தனுஷின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் மீதான நம்பிக்கை அதிகமானது.

தனுஷுக்கு தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்  கொடுத்துள்ளது. இந்த திரைப்படத்தின் 2-வது பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

vada chennai 2
vada chennai 2

வடசென்னை 2 வருமா வராதா?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அடுத்ததாக வட சென்னை 2 அல்லது வாடிவாசல் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் ஏதாவது ஒரு படத்தை தான் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வட சென்னை 2 படத்தை இயக்கப் போவதில்லை என்று முடிவை எடுத்திருக்கின்றாராம். அதற்கு காரணம் என்னவென்றால் வடசென்னை திரைப்படம் வரும்பொழுது வடசென்னை பகுதியில் இருக்கும் மக்களிடமிருந்து ஒரு எதிர்ப்பு வந்தது. அதில் ஏதோ ஒரு வகையில் இயக்குனர் வெற்றிமாறன் மனதளவில் பாதிக்கப்பட்டாராம். அப்போது வந்த விமர்சனம் மற்றும் அந்த மக்களின் எதிர்ப்பு அவரை மிகவும் பாதித்திருக்கின்றது.

இதையும் படிங்க: என்னைத் தவிர யாரையும் விடமாட்டேன்.. பா ரஞ்சித்துக்கு கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்

பொதுவாக வெற்றிமாறன் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களிலும் சிக்காத ஒரு மனிதர். அவருக்கு இது போன்ற நெகடிவ் விமர்சனங்கள் மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்த காரணத்தால் அப்படத்தை எடுக்கும் முடிவை அவர் கைவிட்டு விட்டதாக சினிமா விமர்சனங்கள் கூறுகிறார்கள். அடுத்ததாக வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தின் திரைக்கதையை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.