Connect with us
keerthi suresh

Cinema News

கீர்த்தி சுரேஷின் காதலர் பெரிய தொழிலதிபராம்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாரே!…

Keerthi suresh: இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா தமிழில் நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கியவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். விஜயுடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

keerthi

தெலுங்கில் மகாநடி படத்திற்காக தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். விஜயோடு ஒப்பிட்டு இவர் மீது கிசுகிசுவும் வந்தது. ஆனால், அதில் உண்மையில்லை. பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தனக்கு தோழனாக இருந்த ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகிறார்.

அவரைத்தான் திருமணம் செய்வார் என அவரின் அம்மா பேட்டி கொடுத்தார். அவர் சொன்னது போலவே சமீபத்தில் தனது நீண்டா நாள் காதலர் ஆண்டனி தட்டிலின் புகைப்படத்தை வெளியிட்டு அதை உறுதி செய்தார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தை சேர்ந்தவர்.

ஆண்டனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இவர்களின் திருமணம் கோவாவில் கிறிஸ்துவ முறைப்படியே நடக்கவுள்ளது. Intimate Destination Wedding என சொல்லப்படும் திருமண நிகழ்வுகள் டிசம்பர் 11 மற்றும் 12 என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

keerthi

#image_title

அதன்பின் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி பள்ளியில் படித்து வரும் போது ஆண்டனிமீது அவருக்கு காதல் வந்திருக்கிறது. அப்போது ஆண்டனி கல்லூரி படிப்பை துவங்கியிருந்தார். இதுவரை ஒருமுறை கூட ஆண்டனியும், கீர்த்தியும் ஒன்றாக வெளியே சுற்றும் புகைப்படம் வெளிவந்தது இல்லை.

கீர்த்தி சுரேஷ் இதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். கீர்த்தியின் காதலர் ஆண்டனி கொச்சி, துபாய், சென்னை போன்ற பெரிய நகரங்களில் ரிசார்ட் வைத்திருக்கிறார். இது இல்லாமல் வேறு சில தொழில்களையும் அவர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருவரும் பேசிக்கொள்வார்களாம்.

பொதுவாக நடிகைகள் தொழிலதிபர்களைத்தான் திருமணம் செய்வார்கள். அதன்படியே கீர்த்தி சுரேஷும் ஒரு தொழிலதிபரையே திருமணம் செய்யவிருக்கிறார்.

இதையும் படிங்க: Pushpa 3: ‘புஷ்பா 3’ல் இவரா வில்லன்? ராஷ்மிகாவுக்கு வச்ச செக்கா இருக்கே.. பாத்து பண்ணுங்கப்பா

 

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top