அப்பா 250 கோடினா புள்ள கால்வாசியாவது வாங்கனும்ல.. ஜேசன் சஞ்சயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published on: December 4, 2024
jason
---Advertisement---

சில மாதங்களுக்கு முன்பே விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அறிவிப்பு மட்டுமே வெளியாக படத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன. ஜேசன் சஞ்சய் இயக்கும் அந்த படத்தில் கதாநாயகனாக யார் நடிக்கப் போகிறார் என்ற ஒரு ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அதன்படி துருவ் விக்ரம் ,அதர்வா ,ஹரீஸ் கல்யாண் என இளைய தலைமுறை நடிகர்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டே இருந்தன.

ஆனால் கடைசியாக அவர் இயக்கும் அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தனது அடுத்த கட்ட அரசியல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் மூணு படம்.. சுதா கொங்கரா வச்ச செக்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் SK

அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் எச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி படமாக இருக்கும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்களுடன் பாபி தியோல் மெயின் கேரக்டரில் நடிக்கிறார் .இது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்தடுத்து படங்களை இயக்கி அப்பாவை போல இவரும் ஒரு முன்னணி பிரபலமாக மாறுவார் என எதிர்பார்த்தனர்.

sandeep
sandeep

ஆனால் ஒப்பந்த மட்டுமே போடப்பட்ட நிலையில் இன்னும் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தை லைக்கா தான் தயாரிக்கிறது. இதற்கிடையில் இந்த படத்திற்காக ஜேசன் சஞ்சய் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது அவருடைய முதல் படம் என்பது அனைவருக்குமே தெரியும்.

இதையும் படிங்க: மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை வெல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்?!.. விருது பட்டியலில் அந்த படம்!….

ஆனால் முதல் படமாக இருந்தாலும் அவருடைய சம்பளம் பற்றிய செய்தி அறிந்தால் அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிடும் .இந்த படத்தில் ஜேசன் சஞ்சயின் சம்பளம் 10 கோடி என சொல்லப்படுகிறது .முன்னணி நடிகர்களை வைத்தும் படம் எடுக்கும் இயக்குனர்கள் ஆரம்ப காலங்களில் லட்சங்களில் மட்டுமே சம்பளத்தை பெற்றனர் .ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்களை வைத்து படம் எடுத்த பிறகு அந்த படங்கள் ஹிட்டான பிறகு தான் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் ஜேசன் சஞ்சய் பொறுத்த வரைக்கும் முதல் படத்திலேயே 10 கோடி என்பது அனைவருக்கும் ஒரு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.