Pushpa2 Review: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து ஏற்கனவே வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இன்று புஷ்பா 2 உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட மாஸான காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் கொண்ட படமாக புஷ்பா 2 உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் சில தியேட்டர்களில் மட்டுமே நேற்று இரவு ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அதைப்பார்த்த பலரும் டிவிட்டரில் படம் எப்படி இருக்கு என பதிவிட்டு வருகிறார்கள். பலரும் படமும் சிறப்பாக இருப்பதாகவும், அசத்தலான சண்டை காட்சிகள் இருப்பதாகவும், முதல் பாகத்தை 2ம் பாகம் அதிக பட்ஜெட்டில் மாஸாக எடுக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள்.

இயக்குனர் சுகுமார் சிறப்பான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜூன் பேசும் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது. அதுவும், அவரும், பஹத் பாசிலும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் வசனம் நகைச்சுவை கலந்த மாஸாக இருக்கிறது. படத்தின் ஹைலைட்டே அல்லு அர்ஜூனும் பஹத் பாசிலும் மோதிக்கொள்ளும் காட்சிகள்தான். ஒன் மேன் ஷோவாக கலக்கி இருக்கிறார் அல்லு அர்ஜூன் .

படத்தின் இறுதிக்காட்சியில் வரும் சண்டை காட்சி ஆக்சன் ரசிகர்களுக்கு செம விருந்து. போலீஸ் நிலையத்தில் வரும் காட்சி, கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சி, பெண் வேடத்தில் ஜதராவாக அல்லு அர்ஜுன் வரும் காட்சி என பல காட்சிகளை தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறை இருந்தாலும் ஆக்சன் காட்சிகள் அதை மறக்க வைத்து விடுகிறது. படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, சண்டை காட்சி இயக்கம் எல்லாமே தரம். ஆக்சனோடு எமோஷனலான காட்சிகளை சுகுமார் சரியாக கனெக்ட் செய்திருக்கிறார்.

புஷ்பா 3-வுக்கான லீடும் நன்றாக அமைந்திருக்கிறது. புஷ்பாவாக அல்லு அர்ஜூன் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். பஹத்பாசில் நடிப்பு அசுரனாக மாறியிருக்கிறார். கண்டிப்பாக படம் பிளாக் பஸ்டர். ஆயிரம் கோடியை தாண்டி வசூலிக்கும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துக்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்!.. பிரபல இயக்குனர் சொன்ன ஷாக்கிங் தகவல்..
