Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!

Published on: December 5, 2024
gossip
---Advertisement---

Gossip: தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வளர்ச்சி ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்டு காணப்படும். தற்போது அந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்கள் விரல் வித்தை நடிகரும் நம்பர் நடிகையும் தான்.

இயக்கத்தில் பெரிய ஆன படத்தில் காதலிக்க தொடங்கினர் இந்த ஜோடி. ஆனால் இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காதலுக்கு மிகப்பெரிய பிரேக் விழுந்தது. அம்மணி அடுத்தடுத்த காதலில் பிஸியாகிவிட்டார்.

அந்த காதல் வாழ்க்கையால் சினிமாக்களையும் வகையாக வளர்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்தவர் டாப் ஹீரோக்களின் படங்களை தவிர அடுத்த இடத்தில் இருக்கும் ஹீரோக்களை எட்டிக் கூட பார்க்க மாட்டார்.

இதையும் படிங்க: இயக்குநர் வீட்டில் நடந்த துக்கம்… பிரபலங்கள் இரங்கல்!

அப்படிப்பட்ட ஹீரோக்களின் பட வாய்ப்பு வரும்போது அதை தெனாவட்டாக மறுத்த சம்பவங்களும் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. உச்சத்தில் இருந்த விரல் வித்தை நடிகர் இந்த காதல் பிரிவால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். உடல் எடை போட்டு பார்ப்பதற்கே வயதான தோற்றத்திற்கு சென்றார்.

ஆனால் இந்த கேப்பில் நம்பர் நடிகையின் புகழ் வேறு நிலைமைக்கு சென்று இருந்தது. நடிகைகளின் நம்பர் ஒன் நிலைமைக்கு வந்தார். ஆனால் ஆணவத்தில் இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தோல்வி வரும் என்பதற்கு தற்போது நம்பர் நடிகை சாட்சியாக மாறி இருக்கிறார்.

ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த அம்மணியை தற்போது யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லையாம். இதனால் மூன்றாம் தரம் நாயகர்களுடன் ஜோடி போடும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் போல போட்டோஷூட் செய்து புகைப்படம் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: Rajini: அந்த ரோல் பண்றதுக்கு சும்மாவே இருக்கலாம்.. ரஜினி குறித்து சந்தீப் கிஷன் சொன்ன விஷயம்

தற்போது தன்னுடைய சூப்பர் ஹிட் திரைப்படமான இரட்டை வேட படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இதற்கு சமீபத்தில் ஒல்லி நடிகருடன் நடந்த சந்திப்புதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அவர் ஐடியாவின் பேரில் இவரும் தற்போது இயக்கத்தில் இறங்க இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.