Connect with us
pushpa 2

Cinema News

Pushpa 2: கேஜிஎப் 2, பாகுபலி2, ஆர்ஆர்ஆர் ஐ தூக்கி சாப்பிட்ட புஷ்பா 2… முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடிகளா?

உலகம் முழுவதும் நேற்று புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புஷ்பா படத்தின் வெற்றி தான் இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம். 35 வயது மதிக்கத்தக்க பெண் கூட்ட நெரிசலில் பலியானார் என்பது தான் பெரும் சோகம். அதுமட்டுமல்லாமல் அவரது 9 வயது சிறுவனும் மூச்சுத்திணறல் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளான்.

pushpa 2

pushpa 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள படம் புஷ்பா 2. படத்தின் தயாரிப்பாளர்கள் நவீன் யேர்னேனி மற்றும் ஏலமஞ்சில் ரவி சங்கர். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சிஎஸ். ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

படம் படு ஸ்பீடு

Also read: கமல் நடிச்சிருக்கனும்.. பாடல் ஹிட்டாகி படம் ஓடாததற்கு இதான் காரணமா? என்ன படம் தெரியுமா?

இந்த படம் 3.21 மணி நேரம் ஓடினாலும் எந்த இடத்திலும் ரசிகர்களைச் சோர்வடையச் செய்யவில்லை. படம் முழுக்க விறுவிறுப்பாகச் செல்கிறது. முதல் பாதி ஒண்ணே முக்கால் மணி நேரமும் படம் படு ஸ்பீடு. இரண்டாம் பாதி தெலுங்கு பட பாணியில் படம் பிச்சி உதறுகிறது.

அல்லு – ராஷ்மிகா கெமிஸ்ட்ரி

pushpa2

pushpa2

பேக்ரவுண்டு மியூசிக்கை சாம் சிஎஸ் அற்புதமாக பண்ணியுள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள். அது தவிர அல்லு அர்ஜூனுக்கும், ராஷ்மிகாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டாகி உள்ளது. டான்ஸ்ல தூள் கிளப்பி இருக்கிறார். அப்படி ஒரு அற்புதமான நடனமா என சிலகாகிக்கின்றனர். அதிலும் அல்லு அர்ஜூன் பெண் வேடமிட்டு ஆடும்போது திரையரங்கே அதிர்கிறது.

இந்தப் படத்தின் பைட் வேற லெவல் என்கிறார்கள். அதே போல பாடல் முதல் பாகத்தைப் போல எடுபடவில்லையாம். அந்தவகையில் முதல் நாள் கலெக்ஷன் என்னன்னு பார்க்கலாமா…

முதல் நாள் கலெக்ஷன்

நேற்று முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல்னு தெரியுமா? 160 கோடி. ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் முதல் நாள் வசூல் 133 கோடி தான். இதை முறியடித்துள்ளது புஷ்பா 2. பாகுபலி 2 படமும் முதல் நாளில் 121 கோடி தான் வசூலித்துள்ளது. கேஜிஎப் 2 படமும் முதல் நாளில் 116 கோடி தான் வசூலித்துள்ளது.

Also read: Pushpa 2: பைட்னா எம்ஜிஆர் படத்தையே அப்படி பார்த்தவன்… ஆனா புஷ்பா 2க்கு நோ சான்ஸ்… அசந்து போன பிரபலம்

தொடர்ந்து விடுமுறை நாள்களாக சனி, ஞாயிறு வருவதால் இதன் கலெக்ஷன் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top