Connect with us
dhanush allu

Cinema News

தனுஷூக்கு எச்சரிக்கை மணி அடித்த புஷ்பா 2…. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல…!

புஷ்பா 2 படத்துக்கு கூட்டம் அள்ளுது. படத்துல ஹீரோவோட பேரு அல்லு அர்ஜூன். வெளியில சொல்றவங்க எல்லாம் அல்லுவுக்குக் கூட்டம் அள்ளுதுன்னு தான்…. படத்தோட வெற்றிக்கு ஏற்றமாதிரி நம்ம ஹீரோவுக்கு ஒரு சோகமான விஷயமும் நடந்துருக்கு. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க…

சோகமான விஷயம்

Also read: என்னது ரஜினி மந்திரவாதியா? ஜப்பான், சீனாவில் அவர் படம் ஓடுவதற்கு இதுதான் காரணமா?

நேற்று அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. ஒரு தாய் தன் குழந்தையுடன் வந்து கூட்டத்தில் நசுங்கி இறந்து போனாள். அவரது 9வயது பையன் மூச்சுத்திணறி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

எப்டிஎப்எஸ் ஷோ

அல்லு அர்ஜூன் எப்டிஎப்எஸ் ஷோவுல வந்து தனக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்குன்னு ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கணும்கற ஆவல்ல வந்துட்டாரு. அவரு நினைச்சிருந்தா வீட்ல ஹோம் தியேட்டர்லயே போட்டுப் பார்த்துருக்கலாம். அப்படி அவசரமா தியேட்டருக்கு வரணும்னு என்ன இருக்கு? அவரைப் பார்க்கணும்னு தான கூட்டம் முண்டியடித்துள்ளது. இப்படி ஒரு விபரீதம் நடந்துள்ளது.

மாறு வேஷத்துல ரஜினி 

அந்தப் பெண்ணும் அப்படி ஒரு கூட்டத்துல வந்து இருக்கக்கூடாது. ரஜினி இது மாதிரி அவர் படத்தை ரசிகர்களோடு கர்நாடகாவில் உள்ள தியேட்டருக்குச் சென்று நைட் ஷோ பார்த்துருக்காரு. ஆனா அவரு அவராகவே போகமாட்டாராம். மாறு வேஷத்துல தாடி எல்லாம் வச்சி, தலைப்பாகை கட்டிக்கிட்டுத் தான் போவாராம். அதனால எந்த விபத்தும் வராது.

தனக்குக்கூட்டம் வந்தா போதும். அதைப் பார்த்து மாஸ் காட்டினா போதும்னு நடிகர்களும் நினைக்கிறாங்க. நடிகர்களா இருக்குற அரசியல்வாதியும் நினைக்கிறாங்க.
அப்படி நினைக்கிற வரைக்கும் இப்படி ஒரு அவலம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்.

சிசிடிவிக்கு சோறு

allu arjun

allu arjun

ஒரு அம்மா சோறு சமைச்சிட்டு வந்து சிசிடிவியைப் பார்த்து விஜய்க்கு ஊட்டுது. இப்படி முட்டாள்தனமாக ரசிகர்கள் இருக்குற வரைக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும்.

விடுதலை 2வில் வெற்றிமாறன் ஒரு டயலாக் வச்சிருக்காரு. தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்க முடியும் என்று அந்த டயலாக் வருது. அவர் விஜயைப் பற்றிச் சொன்னாரா? எம்ஜிஆரைச் சொன்னாரான்னு ஒரு விவாதம் போகுது. ஆனா அரசியல்வாதிகளைப் பத்தித்தான் சொல்லிருக்காருன்னு நினைக்கிறேன்.

ரஜினி பார்முலா

Rajni

Rajni

அந்த வகையில் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அல்லு இனி எதிர்காலத்தில் ரஜினி பார்முலாவைக் கடைபிடித்துப் போங்க. அதேபோல ரோகிணி தியேட்டருக்கு தனுஷ் படம் பார்க்கப் போறாங்க. இதைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டு விடுகிறார்கள். இது என்னைக்கோ ஒரு நாள் விபரீதத்தைக் கொண்டு வரும்.

அடுத்த ஜென்மம் மோசமாகும்

Also read: அடிச்சு கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே தலைவா!.. புஷ்பா 2 படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

அதனால் தனுஷ் போன்ற நடிகர்கள் முன்னாடியே முழிச்சிக்கிடுவது நல்லது. தயவுசெய்து அவர் இதுபோன்ற கலவரத்தை உண்டாக்கி விடக்கூடாது. சத்யம் தியேட்டர்ல பின்வாசல் வழியா போய்ப்பாருங்க. ரோகிணி மாதிரி தியேட்டருக்குப் போய் பின்னால மிகப்பெரிய பாவத்துக்கு ஆளாகிவிடாதீங்க. அப்படி செஞ்சீங்கன்னா உங்களுக்கு அடுத்த ஜென்மம் ரொம்ப ரொம்ப மோசமா போயிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top