Connect with us

latest news

இளையராஜாவின் இசைக்கேற்ப உருவான விஜயகாந்த் படம்… அட அது சூப்பர்ஹிட்டாச்சே!

இளையராஜா தனது 83வது வயதிலும் சிம்பொனியை லண்டனில் சென்று அரங்கேற்றியுள்ளார். இன்னும் 13 நாடுகளில் அரங்கேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மேடைக் கச்சேரியும் நடத்தி வருகிறார்.

இவரை ஒரு நடமாடும் இன்னிசை விருந்து என்றே ரசிகர்கள் இப்போது அழைக்க ஆரம்பித்து விட்டனர். இவர் 80களில் தமிழ் சினிமா உலகில் தனது இசையால் சாம்ராஜ்யம் நடத்தியவர். அதன் நினைவலைகளை அவ்வப்போது இன்று வரை மீடியாக்கள் நினைவுபடுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில் ஒரு சுவாரசியமான தகவல்தான் இது.

இளையராஜா ஏற்கனவே போட்டு வைத்த அற்புதமான டியூன்களுக்கு ஏற்ப ஆர்.சுந்தரராஜன் திரைக்கதை எழுதி இயக்கிய படம் வைதேகி காத்திருந்தாள் என்பது பலருக்கும் தெரியாது. அந்தப் படத்துல மேகம் கருக்குது என்ற பாடலும் இடம்பெற்று இருந்தது. அந்தப் பாடலுக்கான பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவிடம் ஒரு வார்த்தையை சொன்னார்.

‘இந்தப் பாடலைப் பொருத்தவரைக்கும் ராஜா, எல்லாரும் ஆகா, ஓகோன்னு பேசணும்’ என்றார். அவர் சொன்னதை நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தார் இளையராஜா. அந்தப் பாடல் பதிவு முடிந்ததுக்குப் பிறகுதான் அந்த நமட்டுச் சிரிப்போடக் காரணம் என்னன்னு ஆர்.சுந்தரராஜனுக்குத் தெரிந்தது.

பாடல் ‘ஆகா, ஓகோ’ன்னு அமையணும்னு ஆர்.சுந்தரராஜன் சொன்னார் அல்லவா. அதற்கு ஏற்ப அந்தப் பாடலின் இடையில் ‘ஆகா, ஓகோ’ன்னு ஒலிக்குற மாதிரி இளையராஜா இசை அமைத்து இருந்தார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1984ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி நடித்த சூப்பர்ஹிட் படம் வைதேகி காத்திருந்தாள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் தேனாமிர்தம். கவுண்டமணி, செந்தில், ராதாரவி, வடிவுக்கரசி என பலரும் நடித்து அசத்தியுள்ளனர். ராசாத்தி உன்ன, அழகு மலராட, ராசாவே உன்ன, மேகம் கருக்கயிலே, இன்றைக்கு ஏன் இந்த, காத்திருந்து காத்திருந்து ஆகிய பாடல்கள் உள்ளன.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top