Connect with us

latest news

உனக்கெல்லாம் இசையைப் பத்தி என்ன தெரியும்? பார்த்திபனை டீஸ் பண்ணிய இளையராஜா

இசைஞானி இளையராஜாவுக்கு விகடன் விருதுகள் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பார்த்திபன் இளையராஜாவைப் பற்றி இப்படிப் பேசினார்.

‘போதைத் தடுப்புச் சட்டத்துல கைது செய்யணும்னா முதல்ல கைது செய்ய வேண்டிய ஆளு இளையராஜா தான். உலகம் முழுக்க தமிழ் ரசிகர்களுக்கு இசை என்ற போதையைக் கொடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்ந்துருக்காரு. வாழ்நாள் சாதனையாளர் விருதுன்னா என்னன்னா நம்மை மாதிரி ரசிகர்களின் வாழ்நாள் பெருகுவதற்கு இசையைக் கொடுத்த சாதனையாளர்’ என்று புகழாரம் சூட்டினார்.

அதன்பிறகு அந்த விருதைக் கொடுப்பதற்காக மேடைக்குக் கமலை வரச் செய்தார். அவர் வந்ததும் கமல் இளையராஜாவைப் பற்றி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்குக் கொடுக்கிறார். அப்போது இளையராஜா இப்படி சொன்னார்.

அதன்பிறகு இளையராஜா பேசும்போது ‘இந்த விருது மறுத்திருக்க வேண்டிய ஒன்று. வாழ்நாள் சாதனையாளர் விருதுன்னு கொடுத்தா வாங்க மாட்டேன். ஏன்னா லைஃப் இன்னும் முடியலையே. முடியுமான்னு கேட்டார் இளையராஜா. இந்த விருதை நான் முக்கியமாக வாங்கிக் கொள்ளக் காரணம் எஸ்.எஸ்.வாசனின் மீது நான் வைத்திருக்கும் மரியாதை’ என்றார் இளையராஜா.

பிறகு பார்த்திபன் நான் அடுத்த ஜென்மத்துல ராஜா சார் வாசிக்கிற டியூனா இருக்கணும். இல்ல அவர் வீட்டு வாசல்ல பியூனா இருக்கணும் என்றார் பார்த்திபன். அப்போது கிட்டாரைக் கொண்டு வந்து இளையராஜாவை மியூசிக் போடச் சொன்னார். ‘நான் மியூசிக் டைரக்ஷன் வந்த பிறகு கிட்டாரைத் தொடவே முடியாது. ‘டச்’ பண்றதே சரியா வராது.

ஸ்ட்ரிங்ஸ் உள்ள போகணும். கரெக்டா ஃபிங்கரிங் வரணும். இவ்ளோ விஷயம் இருக்கே என்ற இளையராஜா உனக்குத் தெரியாது. உனக்கு மியூசிக் தெரியுமா?;ன்னு கேட்டார். ‘தெரியாது’ன்னாரு பார்த்திபன். அப்புறம் ஏன் கிட்டாரைக் கொண்டு வந்து கையில கொடுக்குறன்னு கேட்டாரு இளையராஜா. அப்போது அங்கு இருந்த கமல், வெற்றிமாறன், பாக்கியராஜ், விஜய்சேதுபதி என பலரும் சிரித்து ரசித்தனர்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top