விஜயுடன் நடந்த ஒரே மீட்டிங்.. என்ன பண்ணுவாருனு தெரியும்.. லிங்குசாமி சொன்ன தகவல்

Published on: March 18, 2025
---Advertisement---

அண்மையில் லிங்குசாமியுடன் நடந்த ஒரு பேட்டியில் விஜயின் அரசியல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லிங்குசாமி அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார். இதோ அவர் கூறியது. விஜயின் கொள்கை ,அவருடைய கோட்பாடு, அவர் என்ன செய்யப் போகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் ரஜினிகாந்த் 1996ல் வந்திருந்தால், விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால். இப்படி ஒரு சில விஷயம் இருக்கிறது. அதற்கான ஒரு இடம் மாதிரி இருக்கிறது விஜய் அரசியலுக்கு வந்தது. அவர் நடத்திய அந்த மாநாட்டில் நடந்து வரும் பொழுது அனைவரும் துண்டை தூக்கி போட அது ஒவ்வொன்றையும் எடுத்து தன் தோளில் போட்டது மாபெரும் புட்டேஜ்.

அவர் என்ன செய்யப் போகிறார் என்பது இனிமேல் தான் தெரியும். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் சந்தித்தபோது விஜய்யுடன் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது விஜயுடன் பர்சனல் ஆக அவரை நான் இந்த மாதிரி பார்க்கிறேன். வந்தால் என்ன மாதிரி இருக்க வேண்டும் என மிகவும் பர்சனல் ஆக பேசினேன். ஒரு பெரிய கிரேஸ் இருக்கிறது.

அரசியலைப் பொறுத்த வரைக்கும் அந்த நேரம், அந்த காலகட்ட சூழல் இது எல்லாம் சேர்ந்துதான் தீர்மானிக்கும். அது கண்டிப்பாக இவர் ஒரு முக்கியமான சக்தியாக இருப்பார். அதற்கான தகுதியும் இவரிடம் இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்த நேரத்தில் அவர் படத்தில் பணி புரிந்திருக்கிறேன். ஒரு வேலையை எடுத்து விட்டால் நூறு சதவீதம் தன்னுடைய உழைப்பை போடுவார்.

மிகவும் பர்ஃபெக்டாக வரவேண்டும் என நினைப்பார். நேரம் தவறவே மாட்டார். ஒரு நிமிடம் லேட்டாகவும் வர மாட்டார். முன்னாடியும் வர மாட்டார். சரியான நேரத்துக்கு வந்து விடுவார். எந்த படமாவது அதாவது விஜயின் படம் பாதியிலேயே நின்னு போச்சு. இந்த மாதிரி சூட்டிங் நடக்கல .ஒத்துக்கிட்டு பண்ணல அப்படின்னு ஏதாவது நடந்திருக்கிறதா .அவர் ஒரு வேலையை செய்தால் பெர்ஃபெக்டாக செய்வார்.

அதற்கான தகுதியும் அவரிடம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சரியான நபர்களை கூட வைத்துக்கொண்டு நம்முடைய தமிழுக்கான இங்குள்ள மண் சார்ந்த சில விஷயங்களை எப்படி எல்லாம் எடுத்துட்டு போகணும். இதற்கு முன்னாடி இருக்கிற வரலாறை அவர் படித்து தெரிந்து இன்னும் மனசோட இறங்கி செய்தால் அவருக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது அதில் மாற்றமே கிடையாது என லிங்குசாமி கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment