சிவகார்த்திகேயன் ஹிரோயினை தட்டித் தூக்கிய பிரதீப் ரங்கநாதன்!.. இந்த படத்திலும் 3 லட்டு வேண்டுமாம்!

Published on: March 18, 2025
---Advertisement---

கடந்த மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்திலேயே அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். அதை தொடர்ந்து 2022ம் ஆண்டு லவ் டுடே படத்தில் பிரதீப் ஹிரோவாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். அந்த படம் 100 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீஸில் அள்ளியது.

மேலும், கடந்த மாதம் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் பாக்ஸ் ஆபிஸில் 150கோடி வரை வசூலை அள்ளி குவித்து அஜித்தின் விடாமுயற்சி படத்தையே வீழ்த்தியது. அந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், வி.ஜே.சித்து உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒ மை கடவுளே படத்தின் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து இப்படத்தையும் இயக்கியிருந்தார். மேலும், லியோன் ஜேம்ஸ் இசையமத்து பட்டையை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் பிரதீப்புடன் மமிதா பைஜூ, அனு இமானுவல் மற்றும் ஐஸ்வர்யா ஷர்மா என மூன்று ஹிராயின்கள் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிராகன் படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இவானா என 3 நடிகைகள் நடித்த நிலையில், அடுத்த படத்திலும் 3 லட்டுகளா என சினிமா துறையில் பேசத் தொடங்கிவிட்டனர். மாஸ் ஹீரோவாக உருவானால் இதெல்லாம் சகஜம் தான் என்றும் கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படத்துக்கு முன்பாக இந்த படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment