latest news
பாக்கியராஜ் ரசித்த வாலியின் வரிகள்… அடச்சீ… அந்த அர்த்தமா? அதனால்தான் வாலிபக்கவிஞரா?
Published on
பாக்கியராஜ் வாலியைப் பற்றி ஒருமுறை பேசிய வீடியோ ஒன்றில் அவருடன் இணைந்து பணிபுரிந்த போது நடந்த சில சுவாரசியமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
சிட்டுக்குருவி வெட்கப்படுது: வாலிக்கும் எனக்கும் நல்ல காம்பினேஷன். எனக்குத் தகுந்த மாதிரி அவரு எழுதுவாரு. பாட்டு எழுதுனா கூட எனக்கும் அவருக்கும் டியூனிங் அப்படிங்கற மாதிரிதான் இருக்கும். நான் சும்மா இருக்க மாட்டேன். ராஜாவா இருந்தாலும் சரி. வேற யாரா இருந்தாலும் சரி. ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’ பாட்டுக்கு ராஜாவே டியூன் போட்டாரு. அப்புறம் இல்ல இல்ல. இது கஷ்டம். இதுக்கு கவிஞர்கள் எழுதுறது எல்லாம் கஷ்டம். வேற போடுவோம்னாரு. அது அவங்க தொழில்.
சிட்டுக்குருவி வெட்கப்படுது: அவங்க பார்த்துக்கட்டும். டியூன் நல்லாருக்குன்னா நீங்க போடுங்க. அப்புறம் கவிஞர்கள் மண்டையை உடைச்சிக்கட்டும்’னு சொன்னேன். அப்புறம் நான் சும்மா இல்லாம ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது… பெட்டைக்குருவி கற்றுத்தருது’ ன்னு எழுதிக் கொடுத்தேன். ‘ஆ… நல்லாருக்கே’ன்னு சொன்னாரு. (இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து.)
எடுடா மேளம் அடிடா தாளம்: அப்படித்தான் எப்பவுமே எந்த டியூன் போட்டாலும் அது நல்லாருக்கோ இல்லையோ ரெண்டு லைன் எழுதி வச்சிக்குவேன். அப்புறம் பல்லவில ரெண்டு லைன் போட்டா கவிஞர்கள் வந்து அதை முடிச்சிடுவாங்க. கங்கை அமரன் எழுதுன ‘எடுடா மேளம் அடிடா தாளம்’ பாடலுக்கு முதல்வரியை நான் போட்டு வச்சிருந்தேன். அப்போ அவரு வந்து பிடிச்சிக்கிட்டு எழுதுனாரு.
வாலியின் வரிகள்: அதே மாதிரிதான் வாலியும். எங்கசின்ன ராசா படத்துல ஒரு பாட்டு. ‘மானே மரிக்கொழுந்தே தேனே தினைக்கதிரே தாவணி ஏன் உனக்கு..?’ன்னு எழுதிருந்தேன். ‘என்னடா பாட்டு?’ன்னு வாலி கேட்டாரு. அதைச் சொன்னேன். ‘அதெல்லாம் கரெக்டா எழுதிருவியே…’ன்னாரு. ‘அடுத்த லைன் என்ன?’ன்னு கேட்டாரு. நான் டியூன் போட்டேன்.
‘நீ ரசிக்கிறதை நான் பார்த்துப்புட்டேன், உன் பசியறிஞ்சி நான் போர்த்திக்கிட்டேன்’னு அப்படின்னாரு. இதுக்கு அப்புறம் என்ன தேவை நமக்கு? அவருடைய வரிகள் எனக்கு நல்லாருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எங்க சின்ன ராசா: 1987ல் பாக்கியராஜ் கதை எழுதி நடித்து இயக்கிய படம் எங்க சின்ன ராசா. ராதா ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தான் எடுடா மேளம், கொண்டைச்சேவல், என் ராத்தூக்கம், மாமா உனக்கு ஒரு, நான் தன்னந்தனியா, தென்பாண்டி சீமை ஆகிய பாடல்கள் உள்ளன.
‘தென்பாண்டிச் சீமை ஓரமா…’ பாடலில் தான் பாக்கியராஜ் சொன்ன வாலியின் வரிகள் வரும். இதுமாதிரி வாலிப உள்ளங்களை வசீகரிக்கும் வகையில் பல பாடல்களை வாலி எழுதினதால்தான் அவரை வாலிபக்கவிஞர்னு சொன்னாங்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
Karur: தவெக தலைவர் விஜய் நேற்று கரூர் சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக...