Connect with us

Cinema News

இனி உங்க படத்துல நான் நடிக்க மாட்டேன்!.. நீங்க வேணா என் படத்துல!.. ஜனநாயகன்ல செம சர்ப்ரைஸ்!..

எச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். வரும் ஜூன் மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியலில் இறங்கியுள்ள தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

விஜயின் சம்பளம் மட்டும் 275 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமீதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன், கௌதம் மேனன் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இது அரசியல் படமாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ 2, அட்லீ இயக்கத்தில் ஒரு படம், நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் என விஜய் செய்ய வேண்டும் என ரசிகர்களும் அந்த இயக்குனர்களும் பெரிதும் ஆசை கொண்டுள்ளனர். ஆனால், அதை விட பெரிய ஆசையாக தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் என்கிற முடிவுடன் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், இனிமேல் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தில் அட்லி, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் சிறப்பு கேமியோக்களாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்தளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் தான் தெரியவரும். ஆனால், கண்டிப்பாக ஜன நாயகன் படத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் கேமியோக்கள் மற்றும் சிறு வேடத்திலாவது அவர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top