Connect with us

latest news

தமிழ்சினிமா முன்னேறி இருக்கா? கேள்வி கேட்ட நிருபருக்கு எம்ஆர்.ராதா நெத்தியடி பதில்

தமிழ்சினிமாவில் உலகில் தவிர்க்க முடியாத நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இவரது குரல் வசீகரிக்கக்கூடியது. அதிலும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் ஹைலைட்டான பஞ்ச் டயலாக்குகள் நம்மையே அசரவைக்கும்.

ரத்தக்கண்ணீர்: இவருடைய குரலை மேடையில் பல மிமிக்ரி கலைஞர்கள் ஆர்முடன் ஒலித்துக் காட்டுவர். நாத்திகத்தில் ஈடுபாடு உடையவர். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் காலத்தால் அழியாத காவியம். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் கலக்கி இருப்பார். இன்று வரை இந்தப் படத்தின் டயலாக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன. இதுவே இவரது அபாரமான நடிப்புக்கு சாட்சிதான்.

எம்ஆர்.ராதா பேட்டி: தமிழ்சினிமா முன்னேறி இருக்கிறதா என யாரிடம் கேட்டாலும் தொழில்துறையில முன்னேறி இருக்கு. ஆனா கதை வசனத்துல பெரிசா முன்னேற்றம் இல்லன்னு சொல்வாங்க. இந்தப் பதிலைப் பொருத்தவரை இது சிரஞ்சீவியான பதில்தான். பல வருடங்களுக்கு முன் எம்ஆர்.ராதா பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

கதை விஷயத்துல வீக்: அதில் பத்திரிகையாளர் ஒருவர் தமிழ்சினிமா இந்த 30 வருஷத்துல முன்னேறி இருக்கிறதான்னு கேட்டார். அதற்கு ‘தொழில்துறையில் முன்னேறி இருக்கு. கதை விஷயத்துல அந்தளவுக்கு முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை’ன்னு தான் அந்தக் காலகட்டத்தில் எம்.ஆர்.ராதாவும் பதில் சொன்னார். ஆனா அவர் அதுமட்டும் இல்லாமல் வேறு சில விஷயங்களையும் சொன்னார்.

சினிமா உலகம் உருப்படும்: ‘போட்டிப் போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்குறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு டிக்கெட் வாங்கி 2 வாரத்துக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டி சந்தோஷப்படுறாங்க. என்னங்க வெட்கக்கேடு? இதுவா முன்னேற்றம்? ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நானும், என்னை மாதிரி சர்வீஸ்ல உள்ளவங்களும் சினிமாவை விட்டுப் போனாத்தான் சினிமா உலகத்துக்கு முன்னேற்றம் வரும். அப்பத்தான் சினிமா உலகமும் உருப்படும்.

எத்தனை நாளைக்கு ஏமாத்துறது?: இங்கு உள்ள தயாரிப்பாளர்களும் அப்போதான் புது நடிகர்களைப் போட்டு படத்தை எடுக்க முன்வருவாங்க? எத்தனை நாளைக்குத் தான் எங்க முகத்தையே காட்டி ஏமாத்துறது?’ என்று கேள்வி கேட்ட பத்திரிகையாளரைப் பார்த்துக் கேள்வி கேட்டவர்தான் நடிகவேள் எம்.ஆர்;.ராதா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top