Connect with us

latest news

ஏமாற்றப்பட்ட மீனா… சிந்தாமணியின் சூழ்ச்சி… விஜய் சீரியல் அப்டேட்ஸ்

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் நடக்க இருக்கும் விஜய் சீரியல்கள் எபிசோட்டின் தொகுப்புகளுக்கான புரோமோ குறித்த அப்டேட்கள்.

சிறகடிக்க ஆசை:

விஜயா மற்றும் சிந்தாமணி இருவரும் சேர்ந்து மீனாவை காலி செய்ய ப்ளான் போடுகின்றனர். கடந்த வாரம் எபிசோட்டிலேயே மீனாவுக்கு 2 லட்ச ரூபாயிற்கு பெரிய ஆர்டர் கிடைத்து இருக்க அதுகுறித்து சந்தோஷப்பட்டு இருந்தார்.

அதை மீனா முத்துவிடம் சொன்ன போது நமக்கு 50 ஆயிரம் நிற்கும் எனக் கூறி இருக்க தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் ஆர்டரை முடிக்கும் மீனா மிச்ச காசை மேனேஜரிடம் கேட்க அவர் எல்லாம் வாங்கி விட்டீர்களே என பத்திரத்தை காட்டுகிறார்.

அதிர்ச்சியில் மீனா கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். மீனாவை அங்கிருந்த பெண்கள் வெளியில் தள்ள வீட்டிற்கு வருகிறார். அவர் 2 லட்சம் ஏமாந்ததை நினைத்து விஜயா சிந்தாமணியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

பாக்கியலட்சுமி: செழியன் மற்றும் கோபி இருவரும் ஆகாஷ் வீட்டுக்கு வந்த அவரை மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் உனக்கு ஜெனி கேட்கிறதா எனக் கூறி அடிக்கவும் செய்கின்றனர். வீட்டிற்கு வரும் பாக்கியா செழியனை அழைத்து எதுக்கு ஆகாஷை அடிச்ச என்கிறார்.

அப்புறம் என்ன செய்வாங்க? இன்னும் இனியா பின்னால் வந்தாலும் அடிப்பேன் என்கிறார். இதில் கடுப்பாகும் பாக்கியா செழியனை அடிக்கிறார். கோபி செழியனுக்கு சப்போர்ட் செய்ய இவங்களுக்கு தான் உங்களை சகிச்சிக்கிட்டேன். நீங்க வீட்டை விட்டு போங்க என்கிறார்.

கிளைமேக்ஸ் நோக்கி நகர்வதால் இனியா திருமணத்துடன் சீரியல் முடியவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top