வெறித்தனமான காதல்… ஆனா ஸ்ரீதேவியை ரஜினி திருமணம் செய்யலையே… ஏன்னு தெரியுமா?

Published on: March 18, 2025
---Advertisement---

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை அந்தக் காலத்தில் அப்படி காதலித்தாராம். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 படங்கள் வரை நடித்துள்ளனர். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ரஜினி பஸ் கண்டக்டராக இருந்து அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தாலே படம் சூப்பர்ஹிட் தான்.

கல்யாணத்தில் ஒண்ணு சேரல: மூன்று முடிச்சு, ஜானி, போக்கிரி ராஜா படங்களே இதற்கு உதாரணம். ஸ்ரீதேவியை ரஜினி வெறித்தனமா காதலித்தாலும் அவங்க கல்யாணத்தில் ஒண்ணு சேராமல் போனதுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அப்போ ஸ்ரீதேவிக்கு 16 வயசு. ரஜினி அப்பவே அவரை காதலித்து விட்டாராம். அவர் இயக்குனர் கே.பாலசந்தரிடம் இதுபற்றி கூற, அவரும் ரஜினியை அழைத்துக் கொண்டு பெண் கேட்கச் சென்றாராம். அப்போ ஸ்ரீதேவியின் வீட்டில் ஒரு விசேஷம் நடந்து கொண்டு இருந்ததாம்.

சகுனம் சரியில்ல: அந்த நேரம் பார்த்து ரஜினியும், பாலசந்தரும் போயிருந்தாங்களாம். திடீரென பவர் கட் ஆகிடுச்சாம். உடனே ரஜினிக்கு மனசுக்குள் லேசாக ஒன்று தென்பட்டது. ஏதோ சகுனம் சரியில்லன்னு சொல்வாங்களே. அந்தமாதிரிதான். அவருக்கும் இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கை உண்டு.

ரஜினி சிகிச்சை – ஸ்ரீதேவி விரதம்: அதனால் ஸ்ரீதேவியைப் பெண் கேட்காமல் திரும்பி விட்டார்களாம். அதன்பிறகு அதைப் பற்றியே பேசவில்லையாம். இவர்கள் வாழ்வில் ஒன்று சேரவில்லை என்றாலும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ரஜினி உடல்நிலை சரியில்லாமல் 2011ல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது கூட ஸ்ரீதேவி அவருக்காக 7 நாள் விரதம் இருந்தாராம். ஷீரடி சாய்பாபாவைப் போய் தரிசனம் செய்தாராம்.

பதினாறு வயதினிலே: பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் சப்பாணியாக கமலும், பரட்டையாக ரஜினியும், மயிலாக ஸ்ரீதேவியும் நடித்து இருந்தார்கள். படத்தில் ஸ்ரீதேவி அவ்வளவு அழகாக தேவதை மாதிரி இருப்பார். எளிமையான பாவாடை தாவணியில் வந்தாலும் அழகில் கொள்ளை கொள்வார்.

ரஜினி காதல்: அந்தப் படத்தில் ரஜினியின் முகத்தில் ஒருமுறை ஸ்ரீதேவி காரித்துப்பி விடுவாள். அதனால் அவளை அடைந்தே தீர வேண்டும் என்று வெறித்தனமாக இருப்பார் பரட்டை என்ற ரஜினி. படத்தின் கிளைமாக்ஸ்சில் ஸ்ரீதேவியைக் கதற விடுவார். அப்போ கமல் காப்பாற்றி விடுவார். ஆனால் அந்தப் படத்தில் இருந்தே ரஜினி ஸ்ரீதேவியைக் காதலித்துள்ளார் என்றால் எந்தளவு அவரது காதல் தீவிரமாக இருந்துருக்கும் என்று பார்ததுக் கொள்ளுங்கள்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment