Vijay TVK: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவேன் என சொல்லுவார் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரஜினிக்கு முன் அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினியும், தனியாக கட்சி துவங்கிய கமலும் கூட அதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ரஜினியாவது அரசியலுக்கு வருவேன் என சொல்லி கடந்த 25 வருடங்களாக ரசிகர்களை வைபில் வைத்திருந்தார்.
ஆனால், விஜய் அதை சொல்லவே இல்லை. கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அடுத்த படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவேன் என சொல்லிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி கட்சி மாநாட்டையும் நடத்தினார். அந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள்.
விஜயின் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை பார்த்து பல அரசியல் கட்சிகளே ஆச்சர்யப்பட்டார்கள். அதோடு, அவர் மிகவும் பிரபலமான நடிகர். மேலும், சிறியவர் முதல் பெரியவர் வரை அவருக்கு ரசிகர்கள் இருப்பதால் விஜயின் அரசியல் வருகை கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
அதோடு, மாநாட்டில் பேசிய விஜய் ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு எனவும் சொன்னார். இது பல அரசியல் கட்சியை யோசிக்க வைத்தது. ஆனால், விஜய்க்கு மக்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை தெரியாமல் எதுவும் பேச முடியாது என்பதற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் அமைதியாக இருந்தனர்.
அதில் சிலர் விஜயை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் தவெக கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்தவிழாவில் பேசிய விஜய் ‘நிதி கொடுப்பதில் மத்திய அரசும், மாநில அரசும் எல்கேஜி, யூகேஜி மாணவர்கள் போல சண்டை போட்டு வருகிறார்கள். வாட் புரோ.. இட்ஸ் ராங் புரோ’ என பேசினார். இது ஏற்கனவே விஜயை பார்த்து சீமான் சொன்ன வசனம்.
இந்நிலையில், வாரிசு படத்தின் புரமோஷன் விழாவில் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசிய சரத்குமார் விஜயின் அரசியல் வருகையை விமர்சித்துள்ளார். ஒரு மேடையில் பேசிய அவர் ‘உனக்கு அரசியல் வியூகத்தை சொல்லி கொடுக்க ஹிந்தி தெரிந்த ஒருவர்தான் வர வேண்டுமா?.. எங்கடாஅ இருக்கீங்க நீங்களாம். யார்கிட்ட ஃபிராடுத்தனம் பண்றீங்க. வாட் புரோ.. ஒய் புரோ.. பிரசாந்த் கிஷோர் சொந்தமா போட்டியிட்ட இடத்திலேயே டெபாசிட் இழந்தார். அவர் விஜயை ஜெயிக்க வைக்க போறாராம்’ என பேசியிருக்கிறார்.