Connect with us

latest news

அம்மாஞ்சி ஹீரோ… லவ் பண்றது, பிரேக் அப்லாம் சாதாரணமப்பா… டிராகனை விமர்சித்த புளூசட்டை!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பற்றி பிரபல விமர்சகர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஹீரோவை ஸ்கூல் பையான காட்டுறாங்க. நல்லா வழிச்சி சீவி அம்மாஞ்சி மாதிரி இருக்காரு. அவர் ஸ்கூல் லெவல்ல கோல்டு மெடல் எல்லாம் வாங்கிட்டு வந்து ஒரு பொண்ணை புரொபஸ் பண்றாரு. அவரோ இவரிடம் நீ நல்ல பையன்தான்.

கெத்தா சுத்துறாரு: அங்க ஒருத்தன் இருக்கான் பாரு. அவனை மாதிரி இருந்தாதான் அவன் கூட சுத்த முடியும்னு சொல்லுது. உடனே பிரண்டுகிட்ட சொல்றாரு. நல்லவனா இருந்தா யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாரு. காலேஜ்ல 48 அரியர் போடுறாரு. கெத்தா சுத்துறாரு. ஒரு பொண்ணும் லவ் பண்றாரு. அரியர்ங்கறதால வேலை கிடைக்காம சுத்துறாரு.

கதை: அந்தப் பொண்ணும் வருஷக்கணக்கில காத்துக்கிடக்குது, இவனுக்கு வேலை கிடைக்கிறமாதிரி இல்ல. உடனே வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண வேண்டியதுதான்னு பிரேக் அப் பண்ணுது. அப்போ அந்தப் பொண்ணு நம்ம வாழ்க்கையே புரட்டிப் போடும்னா அது தப்பா இருந்தாலும் பரவாயில்லன்னு அட்வைஸ் பண்ணுது. அதைக் கேட்டு இவரும் தப்பு செய்து முன்னேறப் பார்க்குறாரு. அது ரிப்பீட் ஆகுது. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.

டிரெய்லரைப் பார்க்கும்போது டான் படத்து இன்னொரு வெர்சன் மாதிரி இருக்கு. ரெக்கட் பாய், ஸ்ட்ரிக்டான பிரின்சிபல் அவ்ளோதான். இடைவேளைல அருமையான டுவிஸ்ட் இருந்தது. செகண்ட் ஆப்ல வேற மாதிரி ஸ்க்ரீன்பிளே. ஹீரோ பண்ணின தப்பு எல்லாம் அவரே பார்க்குற மாதிரி சொன்னது. மிஷ்கின் சொன்னது நல்லா இருந்தது.

எப்பவுமே நேர்வழி: வழக்கமா ஹீரோ தப்பு செஞ்சா தப்பு இல்லன்னுதான் படம் எடுப்பாங்க. ஆனா தப்பு எவன் செஞ்சாலும் தப்புதான்னு எடுத்திருப்பாங்க. எப்பவுமே நேர்வழி தான் சரியானதுங்கற விஷயத்தைச் சொன்னதுதான் படத்தோட பலம். இது டெக்னிகலாவே ஸ்ட்ராங்கான படம். நல்ல கேமரா, மியூசிக். லவ் டுடேக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு இது நல்ல செலக்ஷன்.

வரவேற்க வேண்டியது: குட்டி டிராகன் நல்லா பண்றாரு. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் மிஷ்கின்தான். அவரு வாயிலதான் வார்த்தை சரியில்லையே தவிர ரொம்ப அற்புதமா நடிச்சிருந்தாரு. வேற யாரும் பண்ண முடியாது. இந்தப் படத்திலும் சரி. நிலவுக்கு என் மேல்கோபம் படத்திலும் சரி. லவ் பண்றது, பிரேக் அப் பண்றது எல்லாம் சாதாரணமான விஷயம்னு சொல்லிருக்காங்க. வரவேற்க வேண்டியதுதான்.

சரியான வழி: படத்துல யார் செஞ்சாலும் தப்புதான். நேர்மையா இருக்குறதுதான் சரியான வழி அருமையான கருத்தைச் சொல்லிருக்காங்க. இதை பாடமா சொல்லாம எமோஷனலா இன்ட்ரஸ்டா எடுத்துருக்காங்க. பேமிலியோட பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top